கிறித்தினா இரிச்சி
முனைவர் கிறித்தினா "கிறிசி" இரிச்சி (Christina "Chrissy" Richey) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் கலிபோர்னியாவில் உள்ள இலா கனடா பிளின்ட்ரிட்ஜ் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணிபுரிகிறார். இவர் ஐரோப்பா விண்கல இலக்குத் திட்டத்தில் பணிபுரியும் அறிவியலாளரும் வனியற்பியல், விண்வெளி அறிவியல் பிரிவின் ஆராய்ச்சித் தொழில்நுட்பவியலாளரும் ஆவார்.[1] தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணி செய்வதற்கு முன்பு, இவர் வாழ்சிங்டன் டி.சி நாசா தலைமையகத்தில் ஆர்க்டிக் சுலோப் வட்டாரக் குழுமத்தின் ஒப்பந்தக்கார்ராகப் பணி செய்துள்ளார். இவர் நாசாவின்கோள் அறிவியல் பிரிவில் கணினி நிரலாளராகவும் பணி செய்துள்ளார்.[2] மேலும் OSIRIS-REx இலக்குத் திட்ட இணை நிரலாக்க அறிவியலாளராகவும் இருந்துள்ளார்.[3] இவற்றோடு, அறிவியல் செயல் இலக்கு இயக்குநரக இணை அறிவியல் அறிவுரையாளராகவும் இருந்துள்ளார்.[4] இவர் கோள் அறிவியல், வானியல் புலங்களின் பணியிட இன்னல்களின் விளைவுகளை விளக்கும் கல்வியாளராக அறியப்படுகிறார்.[5][6][7] இவர் 2015முதல் 2017 வரை அமெரிக்க வானியல் கழகம் சார்ந்த வானியலில் மகளிர் நிலை குழுவின் தலைவராக உள்ளார்.[8] இவர் 2015முதல் 2017 வரை கோள் அறிவியல் பிரிவு சார்ந்த தொழில்முறைக் காலநிலை, பண்பாட்டு துணைக்குழுவின் துணைத்தலைவரும் ஆவார்.[9] இவர் வானியலில் மகளிர் வலைப்பதிவில் முனைவாகச் செயல்படும் வலைப்பதிவாளராகவும் உள்ளார்[10] இளமையும் கல்வியும்ஆய்வும் பணியும்தகைமைகளும் விருதுகளும்2014:
2015:
2016:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia