கிறிஸ்லாம் (நைஜீரியா)![]() ![]() கிறிஸ்லாம் (Chrislam) நைஜீரியா நாட்டின் தென்மேற்கில் வாழும் யோருபா மக்கள் கடைபிடிக்கும் ஆபிரகாமிய சமயமாகும். கிறிஸ்லாம் சமயமானது கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றின் நற்கூறுகளை இணைத்து புதிய சமயமாக 1970-ஆம் ஆண்டு முதல் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரத்தில் துவக்கப்பட்டது. இந்த புதிய சமயத்தை பெரும்பாலான யோருபா மக்கள் கடைபிடிக்கின்றனர்.[1]இசுலாம் மற்றும் கிறித்தவம் ஒன்றிற்கு ஒன்று எதிராக இரண்டு தனித்தனி மற்றும் பிரத்தியேக மதங்களாக செயல்படுவதால், இரு மதங்களுக்கிடையில் உள்ள பொதுவான தன்மைகளைத் தேடி, இரண்டு சமயங்களையும் உள்ளடக்கிய பொதுவான ஒன்றியத்தை கிறிஸ்லாம் சமயம் ஊக்குவிக்கிறது. [1] நைஜீரியா நாட்டின் வடக்கில் இசுலாமியர்களும், தெற்கில் கிறித்தவர்களும் பெரும்பான்மையினத்தவராக இருப்பினும், கிறிஸ்லாம் சமயத்தைப் பின்பற்றும் யோருபா மக்கள் நைஜீரியாவின் தென்மேற்கில் யோருபாலாந்து பகுதியில் அதிகம் வாழ்கின்றனர். கிறிஸ்லாம் இயக்கத்தின் அடிப்படை மெய்யியல்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia