கிளமிடியாகிளமிடியா ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படும் பாலியல் நோயாகும். தொற்றுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் பரவுகிறது.தொற்றுக்குள்ளான பெரும்பாலானவர்களில் நோய அறிகுறிகள் தென்படுவதில்லை.[1] பெண்களில், பெண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழித்ததன் பின் எரிவு என்பன காணப்படும்.[1] ஆண்களில் ஆண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழித்ததன் பின் எரிவு என்பன காணப்படும்.[1] தோற்று பெண்களின் யோனி குழாயின் மேற்பகுதிக்கு பரவுவதால் பூப்பென்பின் எரிவு, மலட்டுத்தன்மை முதலான நோய்கள் ஏற்படும்.[2] பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம். கிளமிடியா யோனிவழி பாலியல் தொடர்பு, குதவழிப் பாலியல் தொடர்பு அல்லது வாய் வழி பாலியல் தொடர்பு ஆகியவற்றால் தொற்றுவதுடன் தொற்றுக்குள்ளான தாயிடமிருந்து குழந்தை பிறப்பின் போது குழந்தைக்கும் பரவக்கூடியது.[1] கண் வழித் தொற்றுகள் நேரடித்தொடர்பு, ஈ, தொற்றுப்பொருள் முதலானவற்றால் பரவலாம்.[3] " கிளமிடியா ட்ரகோமடிஸ்" பாக்டீரியா மனிதரில் மாத்திரம் தொற்றக்கூடியது.[4] அறிகுறிகள்![]() ![]() பெண்களில்கிளமிடியா தொற்றுக்குள்ளான பெண்களின் கருப்பைக் கழுத்து தொற்றுக்களைக் கடத்தக்ககூடியது, இவர்களில் 50–70% ஆன பெண்களில் எந்தவொரு நோய் அறிகுறிகளும் வெளித்தெரியாது. இத்தகைய அறிகுறிகள் வெளிக்காட்டாத ஆனால் தொற்றுடையவர்களுடனும் பெண் குறி, குதவழி, வாய்வழிப் பாலியல் தொடர்புகளை வைப்பவர்களுக்கு நோய் தொற்றும். ஏறக்குறைய அரைவாசிப் பேர்களில் கருப்பை கழுத்து அழற்சி (PID) அதாவது, கருப்பை,பலோப்பியன் குழாய், சூலகம் ஆகியவற்றில் அழற்சி காணப்படும். இது கருப்பை கழுத்தில் தொடர்ச்சியான வலி, கருத்தரித்தலில் சிக்கல், கருப்பைக்கு வெளியில் கருத்தரித்தல் முதலான சிக்கலான பாதிப்புகளைத் தரவல்லது. கிளமிடியா 70-80%மானவர்களில் அறிகுறிகளை வெளிக்காட்டாத காரணத்தால் இது அமைதியான கொள்ளை நோய் என சொல்லப்படுகின்றது.[5] அத்துடன் மாதக்கணக்கில் அல்லது வருட காலத்துக்கு அறிகுறிகளை வெளிக்காட்டாதிருக்கும். இதன் அறிகுறிகளாக,பெண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், வயிற்றில் நோ, உடலுறவின் போது நோ, காய்ச்சல்,சிறிநீர் கழிக்கையில் நோ, அடிக்கடி சிறுநீர் கழிதல் ஆகியன காணப்படும். ஆண்களில்ஆண்களில், கிளமிடியா தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர்க் குழாய் அழற்சி 50% ஆனவர்களில் காணப்படும்.[5] மேலும் அறிகுறிகளாக; சிறுநீர் வழியில் எரிதல் உணர்வு, ஆண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், விதைகளில் நோ,காய்ச்சல், என்பன காணப்படும் மருத்துவம் செய்யாவிடில் நோய் தொற்று பரவலாவதுடன் மலட்டுத்தன்மை ஏற்படலாம்.[5] கிளமிடியா ஆண்களில் முன்னிற்கும் சுரப்பியில் அழற்சியை ஏற்படுத்த காரணமாகும்.[6]
கண் பாதிப்பு![]() கிளமிடியா வெள்ளை படர்தல் எனப்படும் கண் குருடாவதற்கு ஏதுவான நோயை ஏற்படுத்தும்.1995 இல் ஏறகுறைய 15% குருடு மற்றும் 3.6% 2002 இல் பதிவாகியுள்ளன.[7][8] இதன் தொற்று கண்ணில் ஏற்படும் தொடுகைகளால் தொற்றக்கூடியது, தொற்று ஏற்பட்ட ஆடைகளைப் பயன் படுத்துதல், கண்ணில் மொய்க்கும் ஒருவகை ஈ முதலானவற்றால் தொற்றும்.[9] புதிதாகப் பிறந்த குழந்தைகளிலும் கண் மூலம் இத் தொற்று ஏற்படும். பாதிப்புக்கள்கிளமிடியா தொற்று கருப்பைக் கழுத்திலேயே ஆரம்பிக்கும். சரியாகவும் உடனடியாகவும் சிகிச்சை செய்தால் குணமாக்கலாம். தொற்று பாலோப்பியன் குழாய்களைச் சென்றடைந்தால் பாலோப்பியன் குழாய்கள் தடைப்பட்டு மலட்டுத் தன்மை ஏற்படலாம். பாலோப்பியன் குழாயில் கரு உருவாகவும் கூடும். கருவுற்றவர்களுக்கு இது ஏற்பட்டால் குழந்தைக்குக் கடத்தப்பட்டு அதற்கு கண்ணோய் அல்லது நுரையீரல் ஒவ்வாமை ஏற்படக் கூடும். தடுப்பு முறைபாலுறவு கொள்வதில் இருந்து விலகுதல், ஆணுறை பாவித்தல், தொற்றுக்குள்ளகாத நம்பகமான ஒருவருடன் மட்டும் உடலுறவு வைத்தல்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia