கிள்ளுகுடி (மானாமதுரை வட்டம்)

 கிள்ளுகுடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

கிள்ளுகுடி என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மானாமதுரை வட்டம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.

தொழில்

ஊரின் முக்கிய தொழில் விவசாயம். இங்கு நெல், பருத்தி, மிளகாய், கரும்பு, தக்காளி முதலியன முக்கிய விவசாய விலைபொருள்கள். கிள்ளுகுடியில் முக்கிய பாசனம் மோட்டார் மற்றும் கண்மாய் பாசனம். கிள்ளுகுடி கண்மாய்க்கு தண்ணீர் ஆனது மாரநாடு கண்மாயிலிருந்து கச்சநத்தம் அருகே உள்ள விளத்தூர் மடையில் இருந்து விளத்தூர் வாய்க்கால் வழியாக ஆலடிநத்தம் கிழக்கு பகுதியில் இரண்டு வாய்க்கால் ஆக பிரிந்து ஒன்று விளத்தூருக்கும் மற்றொன்று கிள்ளுகுடி கண்மாய்க்கும் கடமங்குடி வழியாக செல்கிறது. கிள்ளுகுடி கண்மாய்க்கு முக்கிய நீர் ஆதாரம் மாரநாடு கண்மாய் நீர் ஆகும்.

திருவிழா

  1. செல்லமுத்தால் அம்மன் முளைப்பாரி உற்சவ விழா.
  2. சங்கையா சுவாமி வைகாசி களரி பங்காளிகளால் கொண்டாடப்படும்.
  3. அழகர்சாமி சித்திரை திருவிழா.

போக்குவரத்து

பேருந்து வசதி

  1. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கிள்ளுகுடி.
  2. திருப்பாசேத்தியிருந்து ஆட்டோ வசதி.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya