கீதாஞ்சலி
இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali). வங்காள மொழியில் 157 பாடல்கள் கொண்ட இதன் மூலப் பதிப்பு ஆகஸ்ட் 14, 1910 அன்று வெளியிடப்பட்டது. கீதாஞ்சலியின் ஆங்கிலப் பதிப்பு 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ’இந்திய சொசைடி ஆஃப் லண்டன்’ என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது வங்கமொழியிலிருந்து தாகூராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 103 பாடல்களைக் கொண்டிருந்தது. கீதாஞ்சலியின் வங்கமொழிப் பதிப்பிலிருந்து 53 பாடல்கள் மற்றும் அவரது பிற படைப்புகளிலிருந்து 50 பாடல்கள் என மொத்தம் 103 பாடல்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலப் பதிப்பில் இடம்பெற்றன[1][2]. கீதாஞ்சலி உலகிலுள்ள பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. டபுள்யு. பீ. ஏட்ஸ் உட்பட பல கவிஞர்களும் விமர்சகர்களும் இந்நூலைப் பாராட்டியுள்ளார்கள். இந்நூல் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை (1913) இல் பெற்றுத் தந்தது. மேற்கத்தியர் அல்லாத ஒருவருக்கு நோபல்பரிசு வழங்கப்படுவது அதுவே முதல்முறையாகும். இந்திய தேசிய கவி இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதி பின்பு ஆங்கிலக்கவிஞர் டபுள்யு.பீ.ஏட்ஸ்-ன் உதவியுடன் மொழிபெயர்க்கப்பட்ட கீதாஞ்சலி ஒரு பக்தி இலக்கியம். அது ஒரு பக்தன் கடவுளுடன் மீண்டும் இணைவதற்காக ஏங்கும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது. பக்தி இலக்கியமாக இருந்தாலும், தாகூர் ஒரு புதிய தனித்துவமிக்க படைப்பாக கீதாஞ்சலியைத் தந்திருக்கிறார். உள்ளடக்கம்கீதாஞ்சலி நான்கு அடிப்படைத் தலைப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.[3]
இவை நான்கு தலைப்புகளும் ஒன்றோடொன்று இணந்தவை. இவற்றை தனிமைப்படுத்தி பகுக்க இயலாது. ஆத்மா எனும் கோயில்"மனித உடம்பு ஆத்மாவைத் தாங்கி நிற்கும் கோயில்; ஆத்மாவோ கடவுளைத் தாங்கி நிற்கும் கோயில். கடவுளைத் தாங்கி நிற்காத ஆத்மாவினால் எந்தப் பயனுமில்லை. பிறப்பும் இறப்பும் உடலுக்குள் ஆத்மாவை நிரப்புவதன் மூலமும், உடலிலிருந்து ஆத்மாவை வெளியேற்றுவதன் மூலமும் கடவுள் தனது முடிவற்ற (மரணமற்ற) வாழ்க்கையை நடத்துகிறான்". "மனிதன் பங்கேற்கும் இந்த உலக நாடகம் கடவுள் நடத்தும் லீலை. அழியக்கூடிய இந்த மனிதனிடம் நிறைந்துள்ள மகிழ்ச்சி,பலம் மற்றும் புகழ் அனைத்தும் அந்த எல்லையில்லாத கடவுள் தந்ததாகும்".-என்ற தத்துவத்தை தாகூர் தன் கவிதைகளில் குறிப்பிடுவதாக ஸ்ரீனிவாச அய்யங்கார் விளக்கியுள்ளார்.
:"This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new."-கீதாஞ்சலி(முதல் பாடல்). மனிதன்,கடவுள்,இயற்கை
இறப்பு-மனிதன் கடவுளை அடைய செய்யும் பயணம்:"And now I am eager to die into the deathless. Into the audience hall by the fathomless abyss where swells up the music of toneless strings I shall take this harp of my life. I shall tune it to the notes of forever, and when it has sobbed out its last utterance, lay down my silent harp at the feet of the silent." "இந்த உடலைவிட்டு உன்னுடன் கலக்க ஆவலாக உள்ளேன். இந்த ஆத்மா என்னும் இசைக்கருவியை உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன். நீண்ட காலமாக இதிலிருந்து நீ விரும்பியபடி இசையெழுப்பிவிட்டேன். இனி உன்னை வந்தடைய ஆவலாக உள்ளேன்."-இவ்வாறு தாகூர் கூறுவதன்மூலம் மக்களுக்கு ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவிக்கிறார். இறைவனை அடைய இறப்பே வழி என்ற போதிலும், கடவுளின் விருப்பப்படி அவர் தந்துள்ள வயது வரை நாம் வாழ வேண்டியது நம் கடமை. இறைவன் நம்மை அழைக்கும் வரை நம் கடமையைச் செய்தபடி நாம் காத்திருக்க வேண்டும். சில பாடல்களின் மொழிபெயர்ப்பு(பாடல் எண்:13)
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia