கீதா (நடிகை)
கீதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கீதா, தமிழ்த் திரைப்படமான பைரவியில் நடித்தார். பின்னர், பல்வேறு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.[1][2][3] வாழ்க்கைக் குறிப்புபள்ளிக் கல்வியை பெங்களூரு பின்னீட் கல்லூரியில் கற்றார். சென்னையிலும் சில காலம் கல்வி கற்றார். 1997-இல் ஒரு சார்ட்டெர்ட் அக்கௌண்டன்டான வாசனை திருமணம் செய்துகொண்டார். தற்போது நியூயோர்க்கில் வசிக்கிறார். திரை வாழ்க்கை1978 ஆம் ஆண்டில் கீதா திரைத்துறையில் நுழைந்தார். பைரவி என்னும் முதல் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதில் ரஜினியின் சகோதரியாக நடித்தார். பின்னர், நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பிரபலமான நம்ம ஊரு சிங்காரி [4] என்ற பாடலிலும் நடித்துள்ளார். நிறைய மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாக்னி என்னும் திரைப்படம் தொடங்கி 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997 இல் கீதா திருமணத்தின் காரணமாக, பல காலம் நடிக்கவில்லை. பின்னர், சந்தோஷ் சுப்ரமணியம் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். திரைப்படங்கள்மலையாளத் திரைப்படங்கள்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia