கீர்த்தி பாண்டியன்
கீர்த்தி பாண்டியன் (பிறப்பு;18 பிப்ரவரி 1992) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார். இவர்தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார். 2019 ஆம் ஆண்டு இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற சாகசப் படத்தில் அறிமுகமான இவர் இயக்குநர் கோகுல் இயக்கிய தப்பிப்பிழைக்கும் வகை திரைப்படமான அன்பிற்கினியாளில் (2021) முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியானபாராட்டைப் பெற்றுள்ளார். கீர்த்தி பாண்டியன் தும்பாவில் முன்னணி நடிகையாக நடித்த பிறகு ஃபெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதையும் பெற்றுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கைகீர்த்தி பாண்டியன், 18 பிப்ரவரி 1992 அன்று சென்னையில் நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்துள்ளார்.[1] இவருக்கு கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியன் என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர்,[2] இவரது பெரியப்பா மகளான (அக்கா) ரம்யா பாண்டியனும், தமிழ் நடிகையே.[3] கீர்த்தி தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் படித்துள்ளார்.[1] திரைவாழ்க்கை2015–2018பட்டம் பெற்ற பிறகு, பாண்டியன் பாலே மற்றும் சல்சா வகை நடனக் கலைஞராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார், பின்னர் 2015 ம் ஆண்டு நாடக நடிப்புக்கு மாறினார். இவரது தந்தைக்கு சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான ஏ&பி குரூப்ஸின் தலைமை இயக்குனராகவும் இருந்த அதே நேரத்தில் சிங்கப்பூரில் இவரது சொந்த விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார்.[4][5][6] இவரின் நிறம் மற்றும் வயதிற்கேற்ற எடை இல்லாத காரணத்தால் ஆரம்பத்தில் பல்வேறு இயக்குநர்களால், நிராகரிக்கப்பட்டுள்ளார். சில நேரங்களில் கதாபாத்திரத்தின் தன்மை பிடிக்காமல் இவரும் பல படங்களை நிராகரித்துள்ளார்.[7][8][9][10][11][12] 2019–தற்போதுகீர்த்தியை இயக்குநர் ஹரிஷ் ராம் அணுகி, தும்பா (2019) படத்தில் அவருக்கு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்து அதன்படி, தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.[13][14][15] மலையாளத் திரைப்படமான ஹெலனின் (2019) தமிழ் பதிப்பான அன்பிற்கினியாள் (2021) என்ற படத்தில் தனது தந்தையுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[16][17][18] அதைத்தொடர்ந்து ZEE5 இணையதளத்தில் வெளியான போஸ்ட்மேன் என்ற நகைச்சுவை இணையத் தொடரிலும் நடிகர் முனிஷ்காந்துடன் இணைந்து நடித்துள்ளார்.[19] கொஞ்சம் பேசினால் என்ன மற்றும் கண்ணகி ஆகியவை கீர்த்தியின் வரவிருக்கும் படங்களில் அடங்கும்.[20][21] திரைப்படவியல்திரைப்படங்கள்
தொலைக்காட்சி
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia