கீவ ருஸ்[2][3][4][5][6][7] என்பது கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் இருந்த ஒரு முன்னாள் நாடு ஆகும். இது 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீடித்திருந்தது.[8][9] கிழக்கு இசுலாவியர்கள், நார்சு[10][11] மற்றும் பின் மக்கள் ஆகிய பல்வேறுபட்ட மக்கள் மற்றும் அரசியல் அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இந்த நாட்டை ருரிக் அரசமரபு ஆண்டது. இந்த அரசை வாராஞ்சிய இளவரசனான ருரிக் நிறுவினார்.[9] தற்போதைய நாடுகளான பெலாரசு, உருசியா மற்றும் உக்ரைன் ஆகிய அனைத்தும் கீவ ருஸ் நாட்டைத் தங்களது கலாச்சார முன்னோராக உரிமை கோருகின்றன.[12] பெலாரசு மற்றும் உருசியா ஆகிய நாடுகள் தங்களது பெயர்களை இந்தக் கீவ ருஸ்ஸில் இருந்தே பெறுகின்றன. 11ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இதன் அதிகபட்ச பரப்பளவின் போது வடக்கே வெள்ளைக் கடல் முதல் தெற்கே கருங்கடல் வரை, மேற்கே விச்துலா ஆறு முதல் கிழக்கே தமன் தீபகற்பம் வரை, கிழக்கு இசுலாவியப் பழங்குடியினங்களை ஒன்றிணைத்ததாக இந்த நாடு இருந்தது.[8][13][14]
↑Plokhy, Serhii (2006). The Origins of the Slavic Nations: Premodern Identities in Russia, Ukraine, and Belarus. Cambridge: Cambridge University Press. p. 10. The history of Kyivan (Kievan) Rus′, the medieval East Slavic state ...
↑Rubin, Barnett R.; Snyder, Jack L. (1998). Post-Soviet Political Order: Conflict and State Building. London: Routledge. p. 93. As the capital of Kyivan Rus ...
↑Smoke, Richard (1996). Perceptions of Security: Public Opinion and Expert Assessments in Europe's New Democracies. Manchester, UK: Manchester University Press. p. 189. The realm of Kyivan Rus lasted for centuries.
↑Sanders, Thomas (1999). Historiography of Imperial Russia: The Profession and Writing of History in a Multinational State. Armonk, NY: M. E. Sharpe. p. 345. Russia's link to Kyivan Rus′ was primarily dynastic ...