குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்
குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும் (Kunguma Poovum Konjum Puravum) 2009 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் ராஜ மோகன் இயக்கியுள்ளார். இவர் ஏ. வெங்கடேஷ் மற்றும் எஸ். டி. விஜய் மில்டன் போன்றோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். ராமகிருஷ்ணன் அறிமுக நாயகனாகவும் நடிகை தனன்யா நாயகியாவும் நடித்திருந்தனர். எஸ். பி. பி. சரண் தனது கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இசை யுவன் சங்கர் ராஜா. ஏப்ரல் 24 இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கதைச்சுருக்கம்துளசி (தனன்யா) தனது பாட்டியுடன் முட்டம் கிராமத்திற்கு வருகிறார். அங்குள்ள அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கிறாள். கொச்சன் இவளை கண்டவுடன் நேசிக்க ஆரம்பிக்கிறான். கொச்சனின் தாய் சந்திரா துளசியின் படிப்பிற்காக உதவுகிறார். இவர்கள் காதலிப்பதை அறிந்த சந்திரா துளசியை அவமானப்படுத்தி கிராமத்தை விட்டு வெளியேற்றுகிறார். துளசியை தூத்துகுடியில் உள்ள தர்மா என்ற போக்கிரிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள், ஆனால் திருமண நாளன்று தர்மனை காவல்துறையினர் ஒரு கொலைக் குற்றத்திற்காக கைது செய்கிறார்கள். துளசி மீண்டும் முட்டம் வருகிறாள். அங்கே கொச்சன் காதல் தோல்வி காரணமாக குடிக்கு அடிமையாகியுள்ளான். கொச்சன் துளசிக்கு வாழ்வளிக்க நினைக்கிறான். ஆனால் பிணையில் வெளிவந்த தர்மன் முட்டம் வருகிறான். பிறகு என்னவாயிற்று என்பது பல திருப்பங்களுடன் படம் செல்கிறது. படக் குழு
இசையமைப்புஆறு பாடல்களை வாலி (கவிஞர்) மற்றும் கங்கை அமரன் எழுத [யுவன் சங்கர் ராஜா]]] இசையமைத்திருந்தார்[1] தந்தை எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் மகன் எஸ். பி. பி. சரண், ஆகியோர் இருவரும் தயாரித்திருந்தனர், இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளானர்., இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா மற்றும் சகோதரன் வெங்கட் பிரபு இருவரும் மேற்கொண்டிருந்தனர்.[2] ஒலித்தொகுப்பு
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "குழந்தைத்தனமான வார்த்தைகள், விடலைத்தனமான குறும்புகளை ரசித்து லயித்துக்கொண்டு இருக்கும்போதே... தடாலடியாக எட்டிப் பார்க்கிறது அறிவுஜீவித்தனமான 'நிலா தத்துவம்'! அதன் பிறகு வரும் பல காட்சிகளிலும் ஃபார்முலா எட்டிப் பார்க்க ஆரம்பித்து, முன் பாதியின் பிளஸ்களையும் தட்டிப் பறித்து விடுகிறது." என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[3] மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia