குங்குமப் பூச்சிட்டு
குங்குமப் பூச்சிட்டு (Scarlet Minivet, Pericrocotus speciosus) என்பது சிறிய பசிரின் பறவை. இப்பறவை வெப்பவலய தென் ஆசியா முதல் கிழக்கு இந்திய உபகண்டம், தென் சீனா, இந்தோனேசியா, பிலிப்பீன்சு வரை காணப்படுகின்றது. விளக்கம்பெரிக்ரோகோடசு இசுபெசியோசசு என்பது சுமார் 22 செ.மீ. நீளம் வரை வளரக்கூடிய பறவையாகும். கருஞ்சிவப்பு மின்சிட்டுகள் என்றும் இவை அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஆண் பறவையின் அடிப்பகுதிகளும் வால் விளிம்புகளும் கருஞ்சிவப்பு சிறத்தில் காணப்படுகின்றன. ஆனால் பெண் பறவைகளில் மஞ்சள் நிற அடிப்பகுதி, வால் விளிம்புகள், தொடைப்பகுதி மற்றும் இறக்கை திட்டுகள், மேலே சாம்பல் நிறத்துடன் காணப்படும். மேலும், இது வலுவான கருமையான அலகினையும் மற்றும் நீண்ட இறக்கைகளையும் கொண்டது. இதன் முக்கிய உணவு பூச்சிகள் ஆகும்.[2] வகைப்பாட்டியல்இந்த சிற்றினத்தில் கணிசமான புவியியல் மாறுபாடு உள்ளது. பல பிரிக்கப்பட்ட துணையினங்கள் உள்ளன. சுமார் பத்தொன்பது துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:
பல தனிமைப்படுத்தப்பட்ட தீவுகளில் காணப்படும் துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:
சூழலியல் மற்றும் நடத்தைகுங்கும பூச்சிட்டுக்கள் மரங்களில் உள்ள பூச்சிகளை பறந்து பிடிப்பதன் மூலமோ அல்லது அமர்ந்திருக்கும்போது பிடிக்கிறது. இது இதன் இறக்கைகளை கடுமையாக அடித்து இலைகளிலிருந்து பூச்சிகளை வெளியேற்றுகிறது. குங்கும பூச்சிட்டுகள் சிறிய கூட்டங்களாகக் காணப்படும். இதன் ஓசை இனிமையானது. இந்த பறவை மரத்தின் உச்சியில் கூடு கட்டுகிறது. கூடு என்பது சிறிய மரக்கிளைகள் மற்றும் சிலந்தி வலைகளால் பின்னப்பட்ட கோப்பை போன்ற அமைப்பாகும். புள்ளிகள் கொண்ட வெளிர் பச்சை நிற முட்டைகள் இரண்டு அல்லது மூன்றினை இடுகின்றன. அடைகாத்தல் முக்கியமாக பெண் பறவைகளால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஆண் பெண் என இரண்டு பறவைகளும் தமது சந்ததிகளை வளர்க்கின்றன. உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia