குசேலோபாக்கியானம்குசேலோபாக்கியானம். என்பது கதை இலக்கியங்களுள் ஒன்று ஆகும். குசேல + உபாக்கியானம் = குசேலோபாக்கியானம். இது குசேலர் பற்றிய கிளைக்கதை ஆகும்.[1] ஆசிரியர்வல்லூர் தேவராசப்பிள்ளை என்பவர் குசேலோபாக்கியானம் என்ற இந்நூலின் ஆசிரியர்[1][2] என்று கூறப்பட்டாலும், இதன் உண்மையான ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவார். வல்லூர் தேவராசப்பிள்ளை செய்யுள் நூலை இயற்ற ஆர்வம் கொண்டு அது சரியாக வராமல் தவித்து துன்பமடைந்தார். அதைக்கண்டு இரங்கிய இவரின் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தானே குசேலோபாக்கியானம் நூலை இயற்றி அதை வல்லூர் தேவராசப்பிள்ளை பெயரில் வெளியிடவைத்தார்.[3] இந்த வரலாறை உ. வே. சாமிநாதையர் எழுதிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலின் முதல் பாகத்தில் தெளிவாக எழுதியுள்ளார். பிரிவுகள்குசேலோபாக்கியானம் நூலிலடங்கியுள்ள மூன்று பிரிவுகள்:
கருத்துகள்குசேலோபாக்கியானம் தெரிவிக்கும் கருத்துகள்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia