குச்சிக்கல்

குச்சிக்கல் என்பது சிறுவர்களால் தெருவில் விளையாடப்படும்.

ஆட்ட விவரம்

ஒரு சதுரமும் அதற்குள் ஒரு வட்டமும் போடுவர். வட்டத்துக்குள் 4 கற்கள் வைத்திருப்பர். 5 பேர் விளையாடுவர். விளையாடுவோர் எல்லாரும் சுமார் ஐந்தடி நீளமுள்ள குச்சி ஒன்று வைத்திருப்பர்.

ஏதோ ஒரு முறையைப் பின்பற்றிப் பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பட்டவர் தன் இரண்டு கால்களையும் பரப்பிச் சதுரத்தின் எதிர் எதிர் முனைகளில் வைத்துக்கொண்டு நிற்பார். அவர் தன் குச்சியைப் பிறர் தட்டுவதற்கு வசதியாகத் தன் தலைக்கு மேல் உயர்த்தி விரல் கவட்டையில் பிடித்துக்கொண்டிருப்பார்.

பழமேறியவரில் ஒருவர் தன் குச்சியால் தூக்கி எறிவார். பட்டவர் தன் காலடி வட்டத்துக்குள் இருக்கும் கற்களை எடுத்துச் சதுரத்தின் 4 முனைகளிலும் வைத்துவிட்டு ஓடி மற்றவர்களில் ஒருவரைத் தொடவேண்டும். பிறர் தப்பிக்க அங்குமிங்கும் ஓடிச் சதுரத்தின் முனைகளில் வைக்கப்பட்டுள்ள கல் ஒன்றில் காலை ஊன்றிக்கொண்டு நிற்க வேண்டும். இடையில் தொடப்பட்டுவிட்டால் தொடப்பட்டவர் பட்டவராக மாறி விளையாட்டு தொடரும்.

யாரையும் தொடாவிட்டால் பட்டவர் தன் குச்சி கிடக்கும் இடத்திலிருந்து உத்திக்கட்டம் வரையில் தன் குச்சியை வாயில் கவ்விக்கொண்டு நொண்டி அடித்துக்கொண்டு வந்து சேர வேண்டும்.

சேர்ந்திசைப் பாடல்

வாயில் குச்சியுடன் நொண்டி அடித்துகொண்டு பட்டவர் வரும்போது மற்றவர்கள் பாடும் சேர்ந்திசைப் பாடல்.

எங்க வீட்டு நாயி
எலும்பு கடிக்கப் போவுது
கல்லால் அடிச்சேன்
கால் ஒடிஞ்சுக் போச்சு

பார்க்க

கருவிநூல்

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை வெளியீடு, 1954
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya