குஜிலி இலக்கியம்குஜிலி இலக்கியம் என்பது நாட்டார் மக்களால் செய்திகளை பாடலாக கூறிய வழமையாகும். [1] இந்த இலக்கிய முறை 19 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை மிகப் பரவலாக இருந்தது. இந்த குஜிலி இலக்கியத்தினை வலுவான செய்தி ஊடகமாக இலக்கியவாளர்கள் விவரிக்கின்றனர். இன்றைய புதுக்கவிதையைப் போன்றும் கானா பாடல்களைப் போன்றும் குஜிலி பாடல்களானது தனி பாணியில் அமைந்த இலக்கியமாகவே இருந்துள்ளது.[2] தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் குஜிலி பாடல்கள் பாடப்பட்டன. எந்தப் பொருள் புதிதாக அறிமுகமானாலும் அதைப் பற்றிப் பாட்டாக எழுதி இருக்கிறார்கள். இப்பாடல்களில் நடப்பு நிகழ்வுகள் குறித்து சுடச்சுட விரிவான விளக்கத்துடன், அதன் பின் நடந்தமை குறித்தும் பாடப்பட்டுள்ளது. இவைதவிற பாடலாசிரியர், காலம் போன்றவையும் இடம்பெற்றிருந்தன. சொல்லிலக்கணம்குஜிலி என்ற பெயர் குச்சிலி என்ற பெயரிலிருந்து திரிபாக வந்ததாகும். சென்னை பிராட்வே பகுதியில் குச்சிலிக் கடைத்தெரு எனுமிடத்தில் பாடல்களை பாடி நூல்களை வெளியிட்டு விற்பனை செய்து வந்தார்கள். குச்சிலி புத்தகங்கள் என்பது மருவி குஜிலி புத்தகங்கள் என வழங்கப்பட்டது. காலம்19ம் நூற்றாண்டு பின்பகுதியிலிருந்து 20ம் நூற்றாண்டு நடுப்பகுதி வரை. குஜிலி நூல்கள்
நூல்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia