குஜ்ஜர்குர்ஜார் அல்லது குஜ்ஜர் (Gurjar) இன மக்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களை குஜ்ஜார், குஜாரா, குஜுர், வீர் குர்ஜார் மற்றும் குஜார் என்றும் அழைப்பர். இவர்களின் முக்கியத் தொழில் கால்நடைகளை மேய்ப்பதே. குஜ்ஜர்கள் இந்தியாவின் பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் பரவி வாழ்கின்றனர். குஜ்ஜர்கள் இந்து, சீக்கியம் மற்றும் இசுலாமிய சமயங்களைப் பின்பற்றுகிறார்கள். இவர்கள் சத்ரியர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.[1] இவர்கள் 1857-ல் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்திய மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தில் இவர்கள் அதிக அளவில் உள்ளனர். வரலாறுகுஜ்ஜர்கள், கிபி ஏழாம் நூற்றாண்டில் கூர்ஜர-பிரதிகார்ப் பேரரசை நிறுவி, தற்கால குஜராத், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலப் பகுதிகளை கிபி 650 முதல் 1036 முடிய ஆண்டனர். தற்காலத்தில் குஜ்ஜர்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மக்களாக வாழ்கின்றனர்.[2][3] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia