குஞ்செராப் கணவாய்
குஞ்செராப் கணவாய் ( Khunjerab Pass ) என்பது காரகோரம் மலைகளில் 4,693 மீட்டர் உயரமுள்ள (15,397 அடி) மலைப்பாதையாகும். பாக்கித்தானின் வடக்கு எல்லையில் (கில்கித்-பால்டிஸ்தானின் ஹன்சா மற்றும் நகர் மாவட்டங்கள்) மற்றும் சீனாவின் தென்மேற்கு எல்லையில் (சிஞ்சியாங்) ஒரு மூலோபாய நிலையில் இக் கணவாய் உள்ளது. முச்சிலிகா கணவாய் என்பது குஞ்சேரப் கணவாய்க்கு அருகில் 36.97374°N 75.2973°E இல் 5,314-மீட்டர் உயரம் (17,434 அடி) அமைந்துள்ள மற்றொரு மலைப்பாதையாகும். சொற்பிறப்பியல்இதன் பெயர் உள்ளூர் வாகி மொழியின் இரண்டு வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது: "குன்" என்றால் இரத்தம் மற்றும் "செராப்" என்றால் ஊற்று அல்லது அருவியிலிருந்து வரும் சிற்றோடை எனப் பொருள். குறிப்பிடத்தக்கமை![]() குஞ்செராப் கணவாய் சர்வதேச எல்லைக் கடக்கும் உலகின் மிக உயரமான நடைபாதையும் காரகோரம் நெடுஞ்சாலைலையில் உள்ள மிக உயரமான இடமுமாகும். கணவாயின் குறுக்கே சாலை அமைக்கும் பணி 1982 இல் நிறைவடைந்தது. [1] நீளமான, ஒப்பீட்டளவில் தட்டையான பாதையானது குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும் [2] [3] காரணத்தால் பொதுவாக கனரக வாகனங்கள் நவம்பர் 30 முதல் மே 1 வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பின்னர் அனைத்து வாகனங்களுக்கும் திசம்பர் 30 முதல் ஏப்ரல் 1 வரை சாலை மூடப்படும். புனரமைக்கப்பட்ட காரகோரம் நெடுஞ்சாலை குஞ்செராப் கணவாய் வழியாக செல்கிறது. சூன் 1, 2006 முதல், கில்கித்திலிருந்து கஷ்கர், சின்சியாங்கிற்கு தினசரி பேருந்து சேவை உள்ளது. [4] ![]() உலகின் மிக உயரமான பணம் எடுக்கும் இயந்திரம்பாக்கித்தான் குதியில் உலகின் மிக உயரமான பணம் எடுக்கும் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளாது. இது பாக்கித்தானின் தேசிய வங்கி மூலம் நிர்வகிக்கப்படுகிறது. [5] 2007 ஆம் ஆண்டில், பாக்கித்தானின் நிர்வாகத்தில் உள்ள கில்கித்-பால்டிஸ்தானில் சீனாவை போக்குவரத்துடன் இணைக்க இந்க் கணவாய் வழியாக ஒரு தொடருந்துப் பாதை அமைப்பதை மதிப்பீடு செய்ய ஆலோசகர்கள் [6] பணியமர்த்தப்பட்டனர். நவம்பர் 2009 இல் 750 கிமீ நீளமுள்ள அவேலியன் பகுதியை (466 மைல்) இணைக்கும் ஒரு பாதை அமைப்பதற்கான ஆய்வு தொடங்கியது.[7] இருப்பினும், அதன்பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. புகைப்படங்கள்
இதனையும் பார்க்கவும்சான்றுகள்
மேலும் சில ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia