குடமுழா (நூல்)

குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)
நூல் பெயர்:குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்ரமணியன்
வகை:இசை
துறை:இசைக்கருவி வரலாறு
இடம்:6, நிர்மலா நகர்,
வல்லம் சாலை,
தஞ்சாவூர் 613 007
மொழி:தமிழ்
பக்கங்கள்:210
பதிப்பகர்:அஞ்சனா பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு
1997
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

குடமுழா, குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். இந்தியக்கலை மரபில் போற்றப்படும் பஞ்சமுக வாத்தியத்தினைப் பற்றி இந்நூல் விரிவாக ஆராய்கிறது.

அமைப்பு

இந்நூல் முன்னுரை உள்ளிட்ட 18 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

தலைப்புகள்

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகளில் ஒன்று குடமுழா ஆகும்.[1] இலக்கியங்கள், சிற்பங்கள், செப்புப்படிமங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றில் பஞ்சமுக வாத்தியத்தைப் பற்றிய குறிப்புகள் ஆதாரங்களோடு தரப்பட்டுள்ளன. அழியா மரபில் திருவாரூரில் இவ்வாத்தியம் காணப்படுவது பற்றியும், முழவிசைக்கும் முட்டுக்காரர் பற்றியும், மான்தோல் முழவு பற்றியும், எழுவகை ஆடலில் முழவு பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலை

சோழப் பெருமன்னர்களின் காலத்தில் வடிக்கப்பெற்ற இரண்டு பஞ்சமுக வாத்தியங்கள் இன்றும் சோழ நாட்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றை இயக்கும் கலைஞர் முட்டுக்காரரான ஒருவர் மட்டுமே. அம்முட்டுக்காரருக்குப் பின்னர் அதனை இயக்குபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை தொடர்ந்து ஒலித்து வரும் அம்முழவங்கள் இனியும் தொடர்ந்து ஒலிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆதாரங்கள்

  1. [1] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் குடமுழா (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya