குடிமகான்
குடிமகான் (Kudimahaan) என்பது 2023 இல் பிரகாஷ். என் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் சிவன், சாந்தினி, தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சேது இராமன், நமோ நாராயணா, கதிரவன், ஆனஸ்ட் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்திருந்தார். திரைப்படம் 2023 மார்ச் 17 அன்று வெளியிடப்பட்டது.[1][2] நடிகர்கள்
தயாரிப்புஇப்பட முன்னோட்டச் சுவரொட்டியை இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், பொன்ராம் ஆகியோர் சனவரி மாதம் வெளியிட்டனர். [3] படத்தை சினாரியோ மீடியா ஒர்க்சு நிறுவனம் தயாரித்தது. [4] வரவேற்புஇப்படம் 2023 மார்ச் 17 அன்று வெளியிடப்பட்டது. திரைப்பட விமர்சகர்கள், பார்வையாளர்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. [5] டைம்சு ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த லோகேஷ் பாலச்சந்திரன் 5-இற்கு 3.5 மதிப்பீடு கொடுத்தார். மேலும் "இரண்டாம் பாதியில் ஒரு தேவையற்ற பாடலைத் தவிர, பின்னணி இசை ஒரு குறிப்பிட்ட தனித்துவத்துடன் இருந்தது" என்றும் குறிப்பிட்டார். [6] தினமலரின் ஒரு விமர்சகர், ''நட்சத்திர செல்வாக்கில் உள்ள சில நடிகர்கள் நடித்திருந்தால் படம் இன்னும் கவனத்தை ஈர்த்திருக்கும்'' என்று குறிப்பிட்டு 5 இல் 2.75 மதிப்பீட்டைக் கொடுத்தனர் [7] தினத்தந்தி ஒரு விமர்சகர் "குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கலாம்" என்று எழுதினார். [8] மாலை மலர் ஒரு விமர்சகர் 5இற்கு 3 மதிப்பீட்டை அளித்து, "சில இடங்களில் சிரிக்க வைக்காமல் சில இடங்களில் சிரிக்க வைக்க திரைக்கதை அமைத்துள்ளார்" என்று எழுதினார். [9] சௌத் பஃஸ்டிலிருந்து கே. ஆர். மணிகண்டன் விமர்சகர், "பெரிய நட்சத்திரங்கள் இல்லை, பெரிய நகைச்சுவை நடிகர்கள் இல்லை, பெரிய நிறுவனங்கள் இல்லை, இன்னும், குடிமகான் மிகவும் பொழுதுபோக்காவும், உங்கள் நேரம் மற்றும் பணத்திற்கு மதிப்புள்ளதாகவும் இருந்தது." என்று எழுதினார்.[10] சினிமா விகடனிலிருந்து ஒரு விமர்சகர் கதாபாத்திரங்களை திறமையாகப் பயன்படுத்தியதற்காக எழுத்தாளரையும் இயக்குநரையும் பாராட்டினார்.[11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia