குதிரைச் சில்லி

குதிரைச் சில்லி என்பது இரண்டு சிறுவர் விளையாடும் ஒர் குறிவிளையாட்டு.

இரண்டு பேரில் ஒருவர் குதிரை. மற்றொருவர் சவாரி செய்பவர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு சில்லி இருக்கும். குதிரையாக இருப்பவர் தன்னிடமுள்ள சில்லியை எறிவார். சவாரி செய்பவரைப் பார்த்து "நீ அடிக்கிறாயா, நான் அடிக்கட்டுமா" என்பார். சவாரி செய்பவர் தன் சில்லியால் அவர் எறிந்த சில்லை அடிக்கலாம். அல்லது தன் சில்லைக் குதிரையாரிடம் கொடுத்து அடிக்கச் சொல்லலாம். அடித்தவர் குதிரை ஏறலாம். இருவரும் அடிக்காவிட்டால் எறிந்தவரே மீண்டும் குதிரை ஆகி விளையாடவேண்டும்.

மேலும் பார்க்க

கருவிநூல்

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya