குதிரைவாலி
குதிரைவாலி அல்லது புல்லுச்சாமை (horse-tail millet, barnyard millet, panicum verticillatum, Echinochloa frumentacea)[2](இந்திய தினை) புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிர். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. இந்தப் புன்செய்ப் பயிரை 90 நாட்களில் மானாவாரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம். இந்த சிறுதானியம் உலகில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்[3] போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இது மூதாதையர் காலத்திலிருந்து உணவாகப்பயன்படுத்தப்பட்டு வரப்படுகிது, ஆனால் இதன் பூர்வீகம் எது என்று தெரியவில்லை. நெல் போன்ற பயிர்கள் விளையாத நிலங்களில் இவை அதிகமாகப்பயிரிடப்படுகிறது. இதன் அரிசியை வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் விதையை ஊறவைத்து பியர் செய்கிறார்கள். தமிழர்களின் உணவில் இப்பயிர் மிக முக்கிய பங்கு வகித்தது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia