குமாரபாலன்
குமாரபாலன் (Kumarapala (Chaulukya dynasty) (ஆட்சிக்காலம்:கிபி 1143 - 1172), தற்கால குஜராத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சாளுக்கிய குலத்தின் கிளையான சோலாங்கி குலத்தினன் ஆவார். இவரது நாட்டின் தலைநகரம் தற்கால பதான் ஆகும்.[2] வரலாறுமன்னர் சித்தராஜன் ஜெய்சிங்கின் மறைவிற்கு பட்டமேறிய குமாரபாலன்]] 1143–1172 முடிய 29 ஆண்டுகள் சோலங்கி குலப் பேரரசனாக விளங்கினான். சமண சமய குருமார்களை ஆதரித்து, தீர்த்தங்கரர்களுக்கு தில்வாரா கோயில் எழுப்பினான். சமண அறிஞரும் ஆச்சாரியருமான ஹேமசந்திரரை ஆதரித்தார். அலாவுதீன் கில்சியால் இடிக்கப்பட்ட சோமநாதபுரம் சிவன் கோயிலை மீண்டும் கட்டி எழுப்பினான். இவனுடைய காலத்தில் குஜராத் செல்வச் செழிப்புடன் விளங்கியது. குமாரபாலன், பரமாரப் பேரரசர் வல்லாளனை வென்று மால்வா பகுதியை தனது பேரரசுடன் இணைத்தார். தற்கால இராஜஸ்தானின் ரந்தம்பூரின் சௌகான் குல மன்னர் அர்னோராஜனை வென்று, அவர் மகளை குமாரபாலன் மணந்தார். பின்னர் இராசபுத்திரர்களிடமிருந்து அபு மலையை வென்றார். சோலாங்கிப் பேரரசில் இருந்த சௌராட்டிரா பகுதி மக்கள், மன்னர் குமாரபாலனுக்கு எதிராக நடத்திய புரட்சியை ஒடுக்கி, தனது மகன் சோமவர்மனை சௌராஷ்டிராப் பகுதியின் ஆளுநராக நியமித்தார். குமாரபாலன் தனது சோலாங்கிப் பேரரசை கிழக்கில் விதிஷா முதல் மேற்கில் சௌராஷ்டிரம் வரையிலும்; வடக்கே சித்தோர்கார் முதல் தெற்கில் நர்மதை ஆறு வரை விரிவாக்கினான். இதனையும் காண்கமேற்கோள்கள்ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia