குமார் கந்தர்வன்
குமார் கந்தர்வன் (Kumar Gandharva) சிவபுத்ரா சித்தராமையா கோம்கலிமத் என்று அழைக்கப்படும் இவர் (8 ஏப்ரல் 1924 - 12 சனவரி 1992) ஒரு இந்துஸ்தானிப் பாடகராவார். இவரது தனித்துவமான குரல் பாணி மற்றும் எந்தவொரு கரானாவின் பாரம்பரியத்திற்கும் கட்டுப்பட மறுத்ததற்காக நன்கு அறியப்பட்டவர். குமார் கந்தர்வன் என்ற பெயர் இவர் சிறுவயதில் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட தலைப்பாகும். ஒரு கந்தர்வர்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு கணங்களில் ஒரு இனக்குழுவாவர். இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். [1] ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்கந்தர்வன் இந்தியாவின் கர்நாடகாவின் பெல்காம் அருகே சுலேபவியில் கன்னட மொழி பேசும் வீர சைவக் குடும்பத்தில் பிறந்தார். ஐந்து வயதிற்குள், இவர் தனது இசை மேதையின் அறிகுறிகளைக் காட்டினார். 10 வயதில் மேடையில் தோன்றினார். இவருக்கு 11 வயதாக இருந்தபோது, இவரது தந்தை இவரை நன்கு அறியப்பட்ட செம்மொழி ஆசிரியரான பி.ஆர். தியோதரின் கீழ் இசை படிக்க அனுப்பினார். இவரது நுட்பம் மற்றும் இசை அறிவு ஆகியவற்றில் தேர்ச்சி மிகவும் விரைவாக இருந்தது, காந்தர்வா 20 வயதை அடைவதற்கு முன்பே பள்ளியில் கற்பித்தார். இவரது 20 களின் முற்பகுதியில், இசையின் நட்சத்திரமாகக் காணப்பட்டார். மேலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டார். [2] விரைவில், கந்தர்வன் காச நோயால் பாதிக்கப்பட்டார். மேலும் ஒருபோதும் பாடக்கூடாது என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டில், காசநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் இவர் மருந்தை எடுக்கத் தொடங்கினார். [3] படிப்படியாக, இவர் குணமடைந்து மீண்டும் பாடத் தொடங்கினார். இருப்பினும், இவரது குரல் மற்றும் பாடும் பாணி எப்போதும் அவரது நோயின் வடுக்களைத் தாங்கியே நின்றது. இவரது நுரையீரலில் ஒன்று பயனற்றதாக இருந்தது, எனவே இவர் ஒரு நுரையீரலுடன் பாடவேண்டியிருந்தது. திருமணம்ஏப்ரல் 1947 இல் தியோதரின் பள்ளியில் மற்றொரு குரல் ஆசிரியரான பானுமதி கன்சு என்பவரை மணந்தார். இறப்புஇந்துஸ்தானி இசையின் மேதையான பண்டிட் குமார் கந்தர்வன், சனவரி 12, 1992 அன்று, மத்திய பிரதேசத்தின் தனது தேவாஸ் இல்லத்தில், நுரையீரல் தொற்று காரணமாக இறந்து போனார். மற்றும் பல ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட நீண்ட வரலாற்றின் பின்னர் மூச்சு விட்டார். பத்ம பூசண், பத்ம விபூசன் மற்றும் காளிதாஸ் சம்மன் போன்ற விருதுகளால் கௌவரவிக்கப்பட்டார். குறிப்புகள்
நூலியல்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia