குமாஸ்தாவின் பெண்
![]() குமாஸ்தாவின் பெண் (Gumasthavin Penn) என்பது 1941 ஆம் ஆண்டு பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இந்திய தமிழ் காதில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதே பெயரில் நாடகமாக முதலில் டி. கே. முத்துசாமி அவர்களின் எழுத்தில் வெளிவந்தது. இப்படத்தில் கதை நிருபமா தேவியின் பெங்காலி புதினமான அன்ன பூர்ணிகா மந்திர் என்னும் பெயரில் வெளிவந்த புதினத்தை அடிப்படையாகக் கொண்ட குமாஸ்தவின் மகள் நாடகத்தின் தழுவல் ஆகும்.[1] இந்த படம் 1941 மே 10 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. கதைமணி என்ற பணக்காரரிடம் இராமசாமி என்பவர் வேலை பார்க்கிறார். இராமசாமிக்கு சீதா, சரசா என்ற இரு மகள்கள் உண்டு. சகோதரிகள். பொருளாதார நிலையால் இராமசாமியால் தன் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் உள்ளார். அதே கிராமத்தில் உள்ள மற்றொரு செல்வந்தரான இராமுவுக்கு சீதாவை திருமணம் செய்விக்க இராமுவின் தாய் ஆசைபடுகிறார். தனது சீர்திருத்தக் கொள்கைகளுக்கு திருமணம் இடையூறாக இருக்கும் என்பதால் அதை இராமு மறுக்கிறார். எனவே மனமுடைந்த ராமசாமி சீதாவை மிகவும் வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். சீதா விரைவில் விதவையாகிறார். இதற்கிடையில் மணி ஒரு நாள் சீதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் ராமு அவளைக் காப்பாற்றுகிறார். தன் நிலையை நினைத்து மனமுடைய்த சீதா தற்கொலை செய்து கொள்கிறாள். சீதாவின் மரணத்திற்கு தானே காரணம் என்று எண்ணுகிறார் ராமு. பின்னர் சரசாவைத் திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார். அங்கு வரதட்சணை தலை தூக்குகிறது பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.[2] நடிப்புதி இந்துவிலிருந்து எடுக்கபட்ட விவரங்களின் படி:[2]
தயாரிப்புகுமாஸ்தவின் மகள் என்பது நிருபமா தேவியின் பெங்காலி நாவலான அன்னபூர்ணா மந்திரை அடிப்படையாகக் கொண்டு டி. கே. எஸ். சகோதரர்கள் நடத்திய தமிழ் நாடகமாகும்.[2] நாடகம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டி.கே.எஸ். சகோதரர்கள் அதை குமாஸ்தவின் பெண் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார், எஸ். எஸ். வாசன் தனது பதாகையான ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்டின் கீழ் நிதியளித்த மூர்த்தி பிலிம்சுடன் இணைந்து தயாரித்தார். பி. என். ராவ் இயக்குநராக நியமிக்கப்பட்டார், ரஸ்தோம் எம். இரானி ஒளிப்பதிவாளராகவும், பஞ்சு (பின்னர் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டை இயக்குனர்களில் ஒருவராக புகழ் பெற்றார்) உதவி இயக்குநராகவும் பணியாற்றினர்.[2] கே. ஆர். ராமசாமி நடித்த வி. பி. வர் என்ற எதிர்மறை கதாபாத்திரமானது,[3] இயக்குநர் பி. வி. ராவின் பெயரின் எதிர்மாறாக இருந்தது.[2] இசைஇப்படத்திற்கு நாராயணன் மற்றும் பத்மநாபன் பார்ட்டியால் இசையமைக்கப்பட்டது. பி. ஜி. வெங்கடேசன் பாடிய "பாறை மனிதா" என்ற பாடல் பிரபலமடைந்தது.[2] வெளியீடும் வரவேற்பும்குமாஸ்தவின் பெண் 1941, மே, 10 அன்று வெளியானது. படத்தை வாசன் ஜெமினி மூலம் விநியோகித்தார்.[4] இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்போது "பெண்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது தாரமாக வயதான ஆண்களை திருமணம் செய்து வைக்கும் வழங்ங்க் இருந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அதற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர்.[2] தழுவல்இதே கதையை மையமாக கொண்டு ஏ. பி. நாகராஜன், 1974 ஆம் ஆண்டு இந்த படத்தின் மறுஆக்கமாக குமாஸ்தாவின் மகள் படத்தை இயக்கினார்.[3][5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia