குமிழம்
குமிழம், குமிளம், குமிழ் (Gmelina asiatica [1]) என்பது ஒரு தாவர இனமாகும். இது லின்னேயசால் Lamiaceae குடும்பம் என விவரிக்கப்பட்டுள்ளது (ஆனால் முன்பு வர்பினேசி (Verbenaceae) என வகைப்படுத்தப்படிருந்தது).[2] இந்த இனப் பட்டியலில் எந்த கிளையினங்களும் பட்டியலிடப்படவில்லை. குமிழமானது பூக்கும் இரு வித்திலைத் தாவரமாகும். இது பல்லாண்டு வாழும் புதர்ச்செடி, 2-3 மீ. உயரமாகக் கிளைத்து வளரும் சிறுமரமெனவும் கூறலாம். ஸீரோபைட் (xerophyte) பாலை நிலத்தில் வளரும் தாவரம். 1000 மீட்டர் உயரம் வரையிலான குன்றுப் பகுதிகளில் வளர்கிறது. இத்தாவரம் சிறு முட்களை உடையது. இலைஇது சிறு தனியிலைகளைக் கொண்டது. இதன் இலைகள் 3-4 செ.மீ.×2-3 செ.மீ அளவிலானதாக, முட்டை வடிவானதாக, பளபளப்பானதாக இருக்கும். இலையின் அடியில் சிறு வட்டமான சுரப்பிகளை உடையது. சிறுகாம்புடையது. கிளைக் குருத்து முள்ளாதல் உண்டு. மலர்இத்தாவரத்தின் நுனிவளர் பூந்துணரில் 2-3 பெரிய மலர்களும் மொட்டுகளும் காணப்படும். பூங்கொத்து கிளை நுனியிலிருந்து தொங்குவதுண்டு. மலரானது அல்லியிணைந்தது. சற்று வளைந்த புனல் வடிவானது. பூவின் மடல் மேற்புறத்தில் விரிந்திருக்கும். மலரின் புல்லி வட்டமானது நான்கு பசிய இதழ்கள் இணைந்து குழல் வடிவாக இருக்கும். சுரப்பிகள் காணப்படும். மேலே நான்கு விளிம்புகள் இருக்கும். அல்லி வட்டமானது புனல் போன்றிருக்கும் மலரின் கீழ்ப்புறத்தில் மூன்று இதழ்களும் நன்கு இணைந்து சற்று நீண்டும், மேற்புறத்து இரு இதழ்கள் இரு பக்கங்களில் சிறு மடல் விரிந்தும் இருக்கும். மகரந்த வட்டமானது நான்கு குட்டையான மகரந்தத்தாள்கள் இருவேறு நீளத்தில் 2.2 ஆக மலருக்குள் அல்லியொட்டி இருக்கும். தாதுப் பைகள் நீண்டு தொங்கும் இயல்பானவை. சூலக வட்டமானது 2-4 சூவிலைச் சூலகம், ஒரு சூல் வளர்ந்து ஒரு விதை மட்டும் உண்டாகும் சூல்தண்டு இழைபோன்றது. சூல்முடி இரு பிளவானது. கனிஇதன் கனியானது மஞ்சள் நிறமான் சதைக்கனி ட்ரூப் எனப்படும். இதன் விதை சற்று நீளமானது. பயன்கள்இச் சிறுமரம், வலியது, விறகுக்கும் வேலிக்கும் பயன்படும். குமிழின் பழம் மருந்துக்கு உதவும் என்பர். இதன் கனியைக் குழைத்துக் தலையில் தடவ தலையில் உள்ள பொடுகு போகுமென்பர்.[3] இலக்கியங்களில்நற்றிணையில் பயிலப்படும் குமிழ் என்னும் புதர்ச்செடி குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லை. இதன் மலர் அழகிய மஞ்சள் நிறமானது. மலரைத் திருப்பிப் பிடித்துப் பார்த்தால் இது நல்ல நிறமுள்ள மகளிரின் மூக்கை ஒத்திருக்கும். குமிழம்பூவைக் குமிழ் என்று குறிப்பிடும் சங்க இலக்கியம். இது மலைப் பாங்கில் 1000 கி. மீ. உயரம் வரையில் வளரும் புதர்ச்செடி. சிறு மரமென்றும் கூறலாம். இது பல்லாண்டு வாழும் இயல்பிற்று. மலர் மிக அழகிய மஞ்சள் நிறமானது. அல்லியிதழ்கள் இனைந்து சற்று வளைந்த புனல் வடிவாயிருக்கும். கீழ்ப்புற அல்லியிதழ்கள் மூன்றும் சற்று நீண்டு நன்கு இணைந்தும், மேற்புற இரு இதழ்கள் இருபக்கத்திலும் மடல் விரிந்தும் இருக்கும். இம்மலரைத் திருப்பிப் பிடித்துப் பார்த்தால் நல்ல இளமுறிநிறமுள்ள மகளிரின் மூக்கை வடிவாலும் வண்ணத்தாலும் ஒத்து இருக்கும். இரண்டு கண்களுக்குமிடையே மூக்கை ஒவியமாகத் திட்டுவதை இளங்கோவடிகள், இருகருங் கயலோடு இடைக்குமிழ் எழுதி[4] என்றார். மணிமேகலையில் குமிழ் மூக்கு இவைகாண்[5] என்றும் பேசப்படுகின்றது. இதன் மலர்கள்: நுனிவளராப் பூந்துணராகப் பூக்கும். 2-3 மலர்களே ஒரு கொத்தில் காணப்படும். பூங்கொத்து கிளையினின்றும் தொங்கி, குழைபோன்று அசைந்தாடும் என்பர். ஊசல் ஒண் குழை உடைவாய்த் தன்ன குன்றுடைய பாலைநிலப் பாதையில் இம்மலர் பூத்து ஊசலாடும் என்றமையின் இது பாலை நிலமலர் என்பதாகும். இவ்வியல்பினைக் கார் நாற்பதிலும் காணலாம். மேலும் இது கார்காலத்தில் பூக்கும். இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப் மலைப்பகுதியில் வளரும் இச்சிறுமரத்தின் பூக்கள் காயாகிப் பழமாகும். பழமும் பொற் காசுபோல் மஞ்சள் நிறமானது. இம்மரத்தில் பெண் மான் உராய்வதால் இதன் கனிகள் உதிரும் என்றும், இக்கனிகளை மான்கள் உணவாகக் கொள்ளும் என்றும் பாடல்கள் பின்வறுமாறு. படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி படக்காட்சியகம்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia