குயிலி (கதாபாத்திரம்)குயிலி (Kuyili) என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி எனப்படும் ஒரு கற்பனை பாத்திரம் ஆகும்.[1] இவர் இருந்ததற்கான சான்றுகள் வரலாற்றில் இல்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[2][3] இவர் குறித்த கதைகள் ஜீவபாரதி எழுதிய வேலு நாச்சியார் என்ற புதினத்தை அடிப்படையாக கொண்டவை.[4] இவர் பற்றிய கதைகள்சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை ஆங்கிலேய அரசாங்கம் சுட்டுக்கொன்ற பின்னர், 8 ஆண்டுகள் அவர் மனைவி வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குயிலி குத்திக் கொன்றார்.[சான்று தேவை] அதனால் வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார்.[சான்று தேவை] குயிலி வேலுநாச்சியாரின் போர்படையில் பெண்கள் படைக்குத் தலைமையேற்றார்.[சான்று தேவை] வெள்ளையரை எதிர்த்துப் போரிடும் போது சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குயிலி தன் உடலில் எண்ணை பூசி ஆயுதக்கிடங்கில் புகுந்து தன்னைத்தானே தீவைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கை அழித்தார்.[சான்று தேவை] என்பது போன்ற கதைகள் உலவுகின்றன. சர்ச்சைகள்இவர் ஒரு கற்பனையான பாத்திரமென்று தகுந்த ஆதாரங்களுடன் நிருவப்பட்ட ஒப்பனைகளின் கூத்து எனும் குருசாமி மயில்வாகனன் எழுதியுள்ள நூல் வெளி வந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.[2] இவரது சமூகம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன. அதன் படி, இவர் மறவர் இனப் பெண்ணாக, அருந்ததியர் இனப் பெண்ணாக,[5][6][7] பறையர் இனப் பெண்ணாக, பலர் சொந்தம் கொண்டாடுகின்றனர்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia