குரளி
குரளி (Kurali) இந்தியப் பஞ்சாப் மாநிலத்தில் எசுஏஎசு நகர் மாவட்டத்தில் பெருநகர் சண்டிகர் பகுதியில் உள்ள சிறிய ஊராகும்.[1] புவியியல்பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் சண்டிகரிலிருந்து 26 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 21இல் அமைந்துள்ளது. இதன் அண்மையில் மூன்று திசைகளில் கரார், ரோபார், மொரின்டா நகரங்கள் உள்ளன. அரசுதேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்றம் குரளியை நிர்வகித்து வருகின்றது. இங்கு அரசு மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளன. போக்குவரத்துதேசிய நெடுஞ்சாலை 21இல் அமைந்துள்ளதால் சண்டிகருக்கும் பஞ்சாபின் பிற பகுதிகளுக்கும் நேரடி அணுக்கம் உள்ளது. இந்த நகரத்திலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும், தேசியத் தலைநகர் தில்லி உட்பட, பேருந்து, தொடருந்து இணைப்புகள் உள்ளன. இந்நகரத் தொடருந்து நிலையம் மிகவும் தொன்மையானதால் பல பாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அண்மையிலுள்ள வானூர்தி நிலையமாக சண்டிகர் வானூர்தி நிலையம் உள்ளது; இது ஏறத்தாழ 30 கி.மீ. தொலைவில் உள்ளது. மற்றுமொரு பன்னாட்டு வானூர்தி நிலையம் மொகாலியில் 18 நிமிடப் பயணத்தில் உள்ளது. மேற்சான்றுகள் |
Portal di Ensiklopedia Dunia