குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில்
சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் என்பது ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் சித்திர ரத வல்லப பெருமாள் மற்றும் தாயார் செண்பகவல்லி ஆவர். அமைவிடம்இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின், மதுரை நகரிலிருந்து 35 கி. மீ. தொலைவிலுள்ள, குருவித்துறை புறநகர்ப் பகுதியில், (10°04′13″N 77°53′48″E / 10.070364°N 77.896548°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இக்கோயில் அமைந்துள்ளது.[1] தலக்குறிப்புசடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் (கி. பி. 1101 - 1124) ஆட்சி செய்த காலத்தில் இத்திருத்தலம் 'குருவிக்கல்' என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறு அணை ஒன்றின் ஓரமாக அமைந்திருந்த ஆற்றுத்துறை 'குருவிக்கல்துறை' என்று அழைக்கப்பட்டு, பின்னர் பெயர் மருவி 'குருவித்துறை' என்று வழங்கப்படலாயிற்று.[2] சிறப்புஇக்கோயிலில் குடிகொண்டுள்ள சித்திர ரத வல்லப பெருமாள், சந்தன மரத்தினால் உருவாக்கப்பட்டு அருள்பாலிக்கின்றார்.[3] இக்கோயிலில் மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, அவரை நோக்கி நெஞ்சில் கைகூப்பி வணங்கியவாறு மேற்குத் திசை நோக்கி குருபகவான் காட்சியளிக்கிறார். குருபகவானுக்கு அருகில் சக்கரத்தாழ்வார் தோற்றமளிக்கிறார். ஒரே சன்னதியில் குரு பகவான் மற்றும் சக்கரத்தாழ்வார் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.[4] பன்னிரு ஆழ்வார்களும் ஒருசேர இக்கோயிலில் வீற்றிருப்பது வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். புராண முக்கியத்துவம்தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடைபெற்ற காலங்களில் தேவர்கள் அதிகம் பேர் மாண்டனர். அசுரர்கள் மாண்ட போதிலும், அசுர குருவான சுக்கிராச்சாரியார் அவருக்கு மட்டுமே தெரிந்த 'மருத சஞ்சீவினி' மந்திரம் மூலம் மாண்டு போன அசுரர்களை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். இதனை அறிந்து கொண்ட தேவர்களும், தங்கள் குருவான தேவகுரு என்கிற குருபகவானிடம் முறையிட்டனர். பின்னர் சுக்கிராச்சாரியாரிடம் அந்த மந்திரத்தைக் கற்கும் பொருட்டு அவர்கள் சார்பாக குருபகவானின் மகன் கசன் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுக்கிராச்சாரியார் அறியாதவாறு அவரிடம் சீடனாக அனுப்பி வைக்கப்பட்டான். சுக்கிராச்சாரியார் இருப்பிடம் சென்று சேர்ந்து, அங்கு கற்றவாறே அவருடைய மகள் தேவயானியிடம் போலியாக அன்பு செலுத்தி வந்தான். தேவயானியும் காதல்வயப்பட்ட வளாக கசனிடம் பழகினாள். மருத சஞ்சீவினி மந்திரத்தை சுக்கிராச்சாரியாரிடமிருந்து கற்ற கசனின் செயற்பாடுகள் அசுரர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அம்மந்திரம் கசனுக்கு தெரிய வருமானால் அசுரர்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அசுரர்கள் கசனைச் சாம்பலாக்கி, சுக்கிராச்சாரியார் அருந்தும் பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர். அதை அறியாமல் சுக்கிராச்சாரியாரும் அப்பானத்தைக் குடித்து விடவே, கசன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றில் மாட்டிக் கொண்டான். கசனைக் காணாது தவித்த தேவயானி அவளது தந்தையிடம் முறையிடவே, அவரும் தன் தவ வலிமையால் கசன் தன் வயிற்றிலேயே இருப்பதை உணர்ந்து, மருத சஞ்சீவினி மந்திரத்தால் அவனை உயிர்ப்பித்தார். கசன் சுக்கிராச்சாரியார் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான். வயிறு கிழிந்ததால் சுக்கிராச்சாரியார் மாண்டு போனார். பின், கசன், தான் கற்ற மருத சஞ்சீவினி மந்திரத்தால் சுக்கிராச்சாரியாரரை உயிர் பெறச் செய்தான். சுக்கிராச்சாரியார் அவனிடம் தேவயானியை மணந்து கொள்ள வேண்ட, தானும் அவர் வயிற்றிலிருந்தே உயிர் பெற்றதால், தேவயானி அவனுக்கு சகோதரியாவாள் என்று கூறி சமாளித்து அவனது இருப்பிடமான தேவலோகம் செல்ல சுக்கிராச்சாரியாரிடம் அனுமதி பெற்று கிளம்பினான். ஆனால், தேவயானி அதற்கு சம்மதிக்காமல், அவன் தேவலோகம் செல்லாமல் இருக்க மலைகளால் தடுத்தாள். கசனின் இந்நிலையை அறிந்த குருபகவான், அகத்தியரின் ஆலோசனைப்படி, பூலோகத்தில் குருவித்துறை பகுதியில் மகாவிஷ்ணுவை தியானித்து தன் மகனை மீட்டுத் தர வேண்டினார். மகாவிஷ்ணுவும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சித்திர ரதம் ஒன்றில் அமர்ந்து வந்து, குருவுக்கு இவ்விடத்தில் காட்சியருளினார். பின்னர் சக்கரத்தாழ்வாரை அனுப்பி, கசனை மீட்டு குருவிடம் ஒப்படைத்தார். குருவின் வேண்டுகோளை ஏற்று இவ்விடத்திலேயே கோயில் கொள்ளலானார். அதனாலேயே, சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் கொண்ட தலமாயிற்று, இத்திருத்தலம்.[5] பராமரிப்புதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பு கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் இயங்குகிறது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia