குரூக்கிசைட்டு
குரூக்கிசைட்டு (Crookesite) என்பது Cu7(Tl,Ag)Se4 அல்லது (Cu,Tl,Ag)2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் [3]அறியப்படும் ஒரு கனிமம் ஆகும். செலீனைடு வகை கனிமமான இது செப்பு மற்றும் செலீனியம் தனிமங்களுடன் மாறுபடும் தாலியம் மற்றும் வெள்ளி தனிமங்களால் ஆக்கப்பட்டுள்ளது. பண்புகள்நீர்வெப்ப பாய்மங்களில் இருந்து வீழ்படிவாதல் முறையில் இக்கனிமம் உருவாகிறது. தாலியம் 16.3 சதவீதம், தாமிரம் 47.3 சதவீதம், வெள்ளி 2.9 சதவீதம் மற்றும் 33.6 சதவீதம் செலீனியம் என பகுதிப்பொருட்கள் இக்கனிமத்தில் சேர்ந்துள்ளன.[1] நான்முகப் படிக அமைப்பில் படிகமாகியுள்ள குரூக்கிசைட்டு ஒளிபுகாத் தன்மையுடன் நீலநிறச் சாம்பல் முதல் இளஞ்சிவப்பு நீங்கிய பழுப்பு நிறமாக காணப்படுகிறது. 2.5 முதல் 3 என்ற மோவின் அளவுகோலில் 2.5 என்ற கடினத்தன்மை அளவும் 6.9 என்ற நீர் ஒப்படர்த்தியும் கொண்டுள்ளது. பெயர் மற்றும் கண்டுபிடிப்பு1866 ஆம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த சிக்ரிகெரம் என்பவர் இக்கனிமத்தைக் கண்டறிந்தார். தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு (1832-1919) என்பவரின் பெயர் இக்கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.[1] பன்னாட்டு கனிமவியல் சங்கம் குரூக்கிசைட்டு கனிமத்தை Crk[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia