குர்சரண் சிங்
குர்சரண் சிங் (Gurcharan Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியர் ஆவார்.[1] உருவ ஓவியங்களுக்கு இவர் பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார். 1949 ஆம் ஆண்டு இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவில் இவர் பிறந்தார். சண்டிகரில் உள்ள அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் பயின்றார்.[2] இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல குழு கண்காட்சிகளை நடத்தியுள்ளார். மேலும் இவரது படைப்புகள் 1984ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடந்த பன்னாட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கண்காட்சியிலும், 1986ஆம் ஆண்டில் சியோல் நகரத்தில் நடந்த சமகால கலைக் கண்காட்சியிலும், 1988ஆம் ஆண்டில் இலண்டனில் நடந்த சமகால கலை விழாவிலும் காட்சிப்படுத்தப்பட்டன.[2] புது தில்லியில் உள்ள லலித் கலா அகாடமி, புது தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் மற்றும் பாரிசு நகரத்தில் உள்ள இந்தியா இல்லம் ஆகியவை இவரது ஓவியங்களை தங்கள் வளாகத்தில் காட்சிக்கு வைத்துள்ளன.[3] இவரது தனித்துவமான ஓவியங்கள் நிதி ரீதியாக நலிவடைந்த வகுப்புகளைச் சேர்ந்த மக்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். தி ரெட் லைட் இன் பிளாக் அண்ட் ஒயிட் மற்றும் லெசு மிசரபிள்சு ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் இரண்டு முக்கியப் படைப்புகளாகும்.[4] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia