மத்திய கிழக்கின் தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மீனியாப் பகுதிகளில் குர்து மக்கள் வாழும் நிலப்பரப்பு1920 ஒப்பந்த வரைபடத்தில் குர்திஸ்தான் நாடு1986-இல் மத்திய கிழக்கில் குர்து மக்கள் வாழ்ந்த பகுதிகள்
குர்து மக்கள் மத்திய கிழக்கின் தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக் (மேல் மெசொப்பொத்தேமியா), வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மீனியா நாடுகளின் மலைப்பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எதுவும் கிடையாது. பெரும்பாலானவர்கள் சன்னி இஸ்லாமியர்களாக இருந்தாலும், வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.[13] குர்து ஜனநாயகப் படைகள் இசுலாமிய அரசு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து வடகிழக்கு சிரியா மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளை கைப்பற்றினர். [14]
குர்தி மொழியைப் பேசும் ஒரு தொன்ம மக்களான இவர்கள் வாழும் நிலப்பரப்பு குர்திஸ்தான் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது. குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. இதை ஒரு தனி நாடாக ஆக்க வேண்டும் என்று குர்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
↑Estimate based on 7% of 68,688,433: World Factbook, s.v. Iran; Encyclopedia of the Orient, ed. Tore Kjeilen, s.v. Iran:Religions and Peoples, (N.P.:Lexorient, 2006), http://lexicorient.com/e.o/iran_4.htm.
↑Estimate based on 15% to 20% of 26,783,383: World Factbook, s.v. Iraq; Encyclopedia of the Orient, s.v. Iraq: Religions and Peoples.
↑Lokman I. Meho, The Kurds and Kurdistan: A General Background, in Kurdish Culture and Society: An Annotated Bibliography. Comp. Lokman I. Meho & Kelly Maglaughlin (Westport, CT: Greenwood Press, 2001), 4.
↑Kurds in Georgia in Eurominority: Portal of European Stateless Nations and Minorities (Quimper, France: Organization for the European Minorities, 2006). http://www.eurominority.org/; The Kurdish Diaspora.