குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்

பொய்யாலப்பன் ஐயனார் கோவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியிலிருந்து 18 கி.மி.தொலைவில் அமைந்துள்ள குறுமலை பகுதியில், வனபகுதியில் தாழையுத்து ஓடைக்கரையில் அமைந்துள்ளது .

கோவில் வரலாறு

பொய்யாலப்பன் ( பொய்யாலப்படு) என்னும் தெலுங்கு சொல்லுக்கு அடுப்படி என்று பொருள். 500 ஆண்டுகளுக்கு முன்பு குறுமலை பகுதியை சுற்றி வாழும் 18 பட்டி ராஜகம்பளம் நாயக்கர் மக்கள் போர் காரணமாக பலர் இறந்து உள்ளனர் , அவர்களுக்கு உணவு கூட இல்லாமல் பலர் இறந்த காலத்தில் தமிழ் சமுதாயத்தில் அகதாமறக்குலத்தை சேர்ந்த ஒருவர் ராஜகம்பளம் மக்களுக்கு உணவு அளித்து பலரை இறப்பில் இருந்து காத்து வந்ததாகவும், அவர் பின் நாளில் இந்த மக்களுக்கு நிரந்தர உணவு செய்யும் மனிதராக நியமிக்கபட்டார் , அவர் பின் நாளில் இறந்ததால் , தங்கள் உயிரை உணவு கொடுத்து காப்பாற்றிய காரணத்தால் அவரையே 18 பட்டி ராஜகம்பளம் மக்கள் குல தெய்வமாக கொண்டார்கள் என்று இப்பகுதி மக்களின் கும்மி பாடல் மூலம் அறிய படுகிறது . அடுப்படியில் இருந்து காத்ததால் அடுப்படி ஐயனார் , தெலுங்கில் பொய்யாலப்பர் ஐயனார் என்று ஆனார் . எட்டயபுரம் பகுதியை ஆண்ட ஜெகவீர பாண்டிய நாயக்கரால் இக்கோவில் கட்டப்பட்டது .

துணை தெய்வங்கள்

  • கெண்டு கெட்டம்மா ( தமிழில் சேவல் காரி அம்மன் )
  • பெருமாள் கோவில்
  • கன்னிமார் கோவில்
  • முருகன் கோவில்
  • ஜக்கம்மா கோவில்
  • கருப்பசாமி கோவில்

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு ஒரு வரலாறு இக்கோவிலில் உள்ளது .

விழாக்கள்

சித்திரை மாதம் முதல் தேதியில் நடைபெறும் பாரி வேட்டை ( வேட்டைக்கு செல்லும் ) திருவிழா இக்கோவிலில் மிக விமர்சியாக நடக்கும் . சித்திரை பவுர்ணமி தினத்தன்று நடக்கும் ஐயனார் பூஜையில் ஆடு பலியிடுவது மிக முக்கியமான சடங்காக செய்ய படுகிறது .

கெண்டு கெட்டம்மா

ராஜகம்பளம் சமுதாயத்தில் சில்லாவார் உட்பிரிவில் உள்ள இர்றி காரு வம்சத்தை சேர்ந்தவர்களின் குல தெய்வமாக இந்த அம்மன் உள்ளார் . இக்கோவிலில் சேவல் பலியிடுவது கிடையாது , அம்மனின் வாகனமாக சேவல் உள்ளதால் இங்கு ஆடு மட்டுமே பலியிட படுகிறது .

பெருமாள் கோவில்

மலை பகுதிக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் 500 வருடம் பழமை கொண்டது . ஜங்கம்( பண்டாரம் ) இனத்தை சேர்ந்தவர்கள் இக்கோவிலில் பூசாரியாக உள்ளனர் .

முருகன் கோவில்

எட்டயபுரம் பாளையக்காரர்கள் முருக பக்தர்களாக இருந்து வந்து உள்ளனர் எனவே இக்கோவிலை வீரபாண்டி நாயக்கர் ஐயனார் கட்டி உள்ளார் .

கன்னிமார் கோவில்

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் மக்கள் பிற இனத்தை சேர்ந்தவர்களுடன் பழக கூடாது , திருமணமோ வேறு எந்த வகையான தொடர்பும் வேய்திருக்க கூடாது என்ற நடைமுறை இருந்த காலத்தில் இதை மீறுபவர்கள் இம்மக்களால் கொலை செய்யபட்டுள்ளனர் , இவ்வாறாக இறந்த கன்னி பெண்களை இம்மக்களே வணங்கியும் வந்துள்ளனர் . இங்கு இது வரையில் 40 கன்னிமார்கள் தெய்வமாக வணங்க படுகிறார்கள் . ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கன்னிமார் இருப்பார் , சித்திரை நாளில் நடக்கும் விழாவில் கன்னியர்களுக்கு மஞ்சள் நீராட்டுவார்.

கருப்பசாமி கோவில்

பள்ளர் , தேவர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு குல தெய்வமாக இங்குள்ள கருப்பசாமி திகழ்கிறார் . தை மாதத்தில் பள்ளர், தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் இங்கு கூடி பொங்கல் செய்து வழிபாடு செய்கின்றனர்.

தாழையுத்து ஓடை

இங்குள்ள இவ்வோடை என்றும் வற்றாத ஊற்றாக திகழ்கிறது . இங்கு வந்து ஓடை நீரை உண்டால் தோல் நோய்கள் தீரும் என்று நம்பபடுகிறது .

ஆடு பலியிடுவது

இங்கு ஆடு பலியிடுவது மிக முக்கியமான ஒன்று , ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆடு வெட்டி வழிபடுவர் .

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya