குறைத்துடிப்பு இதயம்
குறைத்துடிப்பு இதயம் (bradycardia) ஒருவரின் ஓய்வு இதயத் துடிப்பு வழமையாக நிமிடத்திற்கு ஆணிற்கு 60க்கு கீழாகவும் பெண்களுக்கு 50க்கு கீழாகவும் உள்ளதைக் குறிக்கிறது.[1] குறைத்துடிப்பு நிமிடத்திற்கு 40 வரை எந்தவொரு நோயறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. சோர்வு, பலவீனம், தலைசுற்றல், வேர்த்தல் ஆகியன நோயறிகுறியாக உள்ளன; மிகக் குறைவான இதயத்துடிப்பு இருக்கையில் மயக்கமுண்டாகிறது.[2] மிக்கப் பயிற்சி பெற்ற மெய்வல்லுநர்களின் மெய்வல்லுநர் இதய நோய்த்தொகுதியில் மிகக் குறைவான இதயத் துடிப்பு ஏற்படுகின்றது. இது ஓர் விளையாட்டுக்கேற்ற ஒத்தமைதல் ஆகும். இதனால் பயிற்சியின் போது இதயத் துடிப்பு மிகைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.[3] இதயத் தடிப்பு நிமிடத்திற்கு 60க்கு கீழே இல்லாவிடினும் ஒருவரின் தற்போதைய மருத்துவ நிலையில் மிகக் குறைவானதாக கருதப்படும் இதயத் துடிப்பு "சார்பு குறைத்துடிப்பு" என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia