குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்இரண்டாம் குலோத்துங்கனைச் சிறப்பித்து அவன்மீது ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ஆகும். இது பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த கி.பி 12ஆம் நூற்றாண்டு நூல் ஆகும்.[1] இரண்டாம் குலோத்துங்கன் மீது அவர் பாடிய முதல் நூல் குலோத்துங்கன் உலா ஆகும். நூல் அமைப்பு103 பாடல்களைக் கொண்ட இந்நூலில் 16 பாடல்கள் மட்டும் முழுமையாகக் கிடைக்காமல் சிதைந்துள்ளன. குலோத்துங்கன் திருமாலின் அவதாரமாக கூறப்படுவதால் திருமாலுடைய அவதாரச் செயல்கள் பலவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.[2] முன்னவர் வரலாறுபிற்காலச் சோழ மன்னர்களான இராசராசன், இராசேந்திரன், இராசாதிராசன், முதற்குலோத்துஙகன், விக்கிரமன் ஆகிய இவனது முன்னவர்களின் வரலாற்றை நிரல்பட விளக்கியுள்ளார்.[2] பருவங்கள்இரண்டாம் குலோத்துங்கனின் வீரச் செயல்களையும், ஏனைய செய்திகளையும் சுவைபடத் தொகுத்து ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனைப் பிள்ளையாகப் பாவித்து காப்புப்பருவம், செங்கீரைப்பருவம், வாரானைப்பருவம், அம்புலிப்பருவம், சிறுபறைப்பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப்பருவம் எனப் பத்துப் பருவங்களின் வாயிலாக அவன் புகழ் உரைத்துள்ளார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia