குல்சார் சிங் ராணிகே
குல்சார் சிங் ராணிகே (Gulzar Singh Ranike) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், சிரோமணி அகாலி தளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்திய பஞ்சாப் அரசின் மேனாள் அமைச்சராவார். முந்தைய பஞ்சாப் அரசாங்கத்தில் ஆய அமைச்சராக இருந்தவர். அந்த அரசில் கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். [1] 2012 முதல் 2017 வரை இந்தப் பதவியில் இருந்தார். சிரோமணி அகாலி தளப் பட்டியலினப் பிரிவின் தலைவராகவும் உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கைமசாபி சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையும் அகாலிதளத்தின் தலைவராக இருந்தார். [2] அரசியல் வாழ்க்கைஇவர் தனது அரசியல் வாழ்க்கையை 1983 இல் ராணிகேவின் சர்பஞ்சாக (கிராமத் தலைவர்) தொடங்கினார். முதன்முதலில் பஞ்சாப் சட்டப் பேரவைக்கு 1997 இல் அகாலி தள வேட்பாளராக அட்டாரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] 2002, 2007 மற்றும் 2012 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5] [6] [7] 2007 இல் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், பட்டியல் மற்றும் பிசிக்கள் நலன், விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். [8] 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தொடர்ந்து கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம், SC & BC நலன் அமைச்சராக இருந்தார், அதேசமயம் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறை துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலுக்கு ஒதுக்கப்பட்டது. [1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia