குளோரியா ஸ்டுவர்ட்
குளோரியா பிரான்செசு ஸ்டுவர்ட் (Gloria Frances Stuart, சூலை 4, 1910 – செப்டம்பர் 26, 2010)[1] அமெரிக்க நடிகை ஆவார். 1932 ஆம் ஆண்டில் இருந்து ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற இவர் மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்களிலும் தோன்றி நடித்தவர். இவர் தி இன்விசிபிள் மான் (1933), ஹியர் கம்ஸ் த நேவி (1934) போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர். 1930களில் ஹாலிவுடின் முக்கிய நடிகையாக தோன்றி நடிக்க ஆரம்பித்தார். 1932 முதல் 1939 வரை 42 படங்களில் இவர் நடித்திருந்தார். 1946 ஆம் ஆண்டில் இவர் அதிகாரபூர்வமாக இளைப்பாறினார். பின்னர் இவர் 1997 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஜேம்ஸ் கேமரனின் டைட்டானிக் திரைப்படத்தில் பேரழிவில் இருந்து தப்பிய ஓல்ட் ரோஸ் என்ற பாத்திரத்திலும், நிகழ்ச்சியுரையாளராகவும் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக இவரது 87வது வயதில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட வயதில் கூடியவர் இவரே ஆவார். 2000 ஆம் ஆண்டில் பீப்பில்ஸ் மகசீன் என்ற இதழ் இவரை உலகின் 50 அழகான நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருந்தது. மறைவுகுளோரியா ஸ்டுவர்ட் 2010, செப்டம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் 100வது அகவையில் காலமானார். குளோரியா இறப்பதற்கு முன் ஐந்து ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்[2]. மேற்கோள்கள்
வெஇ இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia