குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I)
குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I) (Chloro(dimethyl sulfide)gold(I)) என்பது C2H6AuClS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் தங்கத்தின் ஓர் ஒருங்கிணைவுச் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் தங்கத்தின் வேதியியலில் பிரவேசிப்பதற்கான நுழைவுப் புள்ளியாகக் கருதப்படுகிறது. கட்டமைப்புமற்ற தங்கம்(I) அணைவுச் சேர்மங்களைப் போலவே குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்((I) சேர்மமும் மையத்தில் இடம்பெற்றுள்ள தங்க அணுவின் நோக்கில் கிட்டத்தட்ட நேர்கோட்டு வடிவ கட்டமைப்பை (176.9°) ஏற்கிறது. தங்கம்-கந்தகம் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பு நீளம் மற்ற தங்கம்(I) அணைவுச் சேர்மங்களின் தங்கம்-கந்தகம் அணுக்களுக்கிடையேயான பிணைப்பைப் போலவே 2.271(2) Å என்ற நீளத்தைக் கொண்டுள்ளது. [1] தயாரிப்புதங்கத்தை இராச திராவகத்தில் கரைத்து முதலில் குளோரோ ஆரிக் அமிலம் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. இதைத் தொடர்ந்து இருமெத்தில் சல்பைடு சேர்த்து குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்((I) அணைவுச் சேர்மம் தயாரிக்கப்படுகிறது. [2] சோடியம் டெட்ராகுளோரோ ஆரேட்டை தங்கம்(III) அயனியின் மூலமாகப் பயன்படுத்தியும் குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்((I) தயாரிக்க முடியும். [3] இதே வழிமுறையில் புரோமோ ஒப்புமைச் சேர்மமும் (Me2SAuBr) தயாரிக்கப்படுகிறது. [4]
என்ற வேதிச்சமன்பாடு இவ்வினைக்கான தோராயமான சமன்பாடாகும். 1:2 என்ற விகிதத்திலுள்ள இருமெத்தில் சல்பாக்சைடு / அடர் நைட்ரிக் அமிலக் கரைசலில் உள்ள தனிமநிலை தங்கத்தைப் பயன்படுத்தி எளிமையான முறையில் இச்சேர்மத்தை தயாரிக்கலாம். இவ்வினையில் இருமெத்தில் சல்பாக்சைடு ஓர் ஆக்சிசனேற்றியாகவும் வினையில் உருவாகும் Me2S ஓர் ஈந்தணைவியாகவும் செயல்படுகின்றன.[5] வினைகள்குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I) அணைவுச் சேர்மத்திலுள்ள இருமெத்தில் சல்பைடு ஈந்தணைவியை பிற ஈந்தணைவிகள் எளிமையாக இடப்பெயர்ச்சி செய்கின்றன.
இருமெத்தில் சல்பைடு எளிதில் ஆவியாகும் என்பதால் இதை ஆவியாக்கி புதியதாக உருவாகும் தங்க அணைவுச் சேர்மத்தை எளிதில் தூய்மைப் படுத்தலாம். ஒளி, வெப்பம், காற்று போன்றவற்றில் குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I) வெளிப்பட நேர்ந்தால் தனிமநிலை தங்கமாக சிதைவடையும். எனவே -20 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் கருப்பு நிற கண்ணாடி கொள்கலனில் இந்த அணைவுச் சேர்மத்தைச் சேமிப்பது பாதுகாப்பானதாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia