குழந்தைப்பருவம்
![]() ஒரு குழந்தை (child) என்பது பிறப்பு மற்றும் பூப்படைதல் நிலைகளுக்கு இடையில்,[1][2] அல்லது கைக் குழந்தை மற்றும் வளர்ச்சியாக்கக் காலத்திற்கு இடையில் உள்ள மனித நிலையினைக் குறிப்பதாகும் .[3] இது பிறக்காத மனிதனையும் குறிக்கலாம்.[4][5] சட்டப்பூர்வ வரையறையில் இளவர் என்று அறியப்படுகிறது. [6] பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பொதுவாக உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறைவு ஆகும். அவர்கள் பொதுவாக தீவிரமான முடிவுகளை எடுக்க முடியாதவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். பெற்றோரைப் பொறுத்தவரையில் எந்த வயதுடைய மகன்கள் மற்றும் மகள்கள் குழந்தைகளாகக் கருதப்படுகிறார்கள்.[7] உயிரியல், சட்ட மற்றும் சமூக வரையறைகள்![]() உயிரியல் அறிவியலில், பிறப்பு மற்றும் பூப்படைதல் நிலைகளுக்கு இடையில்,[8][9]அல்லது கைக் குழந்தை மற்றும் வளர்ச்சியாக்கக் காலத்திற்கு இடையில் உள்ள மனித நிலையினைக் குறிப்பதாகும்.[10]சட்டப்பூர்வமாக, குழந்தை என்ற சொல் பெரும்பான்மை வயதுக்குக் குறைவான அல்லது வேறு சில குறிப்பிட்ட வயது வரம்பிற்குக் குறைவானவர்களைக் குறிக்கலாம். குழந்தைகள் பொதுவாக பெரியவர்களை விட குறைவான உரிமைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் தீவிரமான முடிவுகளை எடுக்க முடியாதவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.விவாகரத்து வழக்குகளில், பெற்றோர் விவாகரத்து செய்தாலும், இல்லாவிட்டாலும் 18 வயதிற்கு கீழிருக்கும் குழந்தை எந்த பெற்றோரிடம், அல்லது உறவினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென நீதி மன்றம் தீர்மானிக்கிறது. குழந்தை பாதுகாப்புயுனிசெஃப்பின் கருத்துப்படி, குழந்தைப் பாதுகாப்பு என்பது " கட்டாயப் பால்வினைத் தொழில், கடத்தல், குழந்தைத் தொழிலாளர் மற்றும் பெண் பிறப்புறுப்பைச் சிதைத்தல் / வெட்டுதல் மற்றும் குழந்தைத் திருமணம் போன்ற தீங்கு விளைவிக்கும் பாரம்பரிய நடைமுறைகள் உட்பட - குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது" என்பதைக் குறிக்கிறது. [11] குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia