குவாந்தான் மாவட்டம்
குவாந்தான் மாவட்டம் (ஆங்கிலம்: Kuantan District; மலாய்: Daerah Kuantan; சீனம்: 关丹县; சாவி: كوانتن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் செராண்டுட்டு மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குவாந்தான் மற்றும் பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota). இதர நகரங்கள் பஞ்சிங், சுங்கை லெம்பிங், கம்பாங் மற்றும் பெசெரா. நிர்வாகப் பிரிவுகள்மாரான் மாவட்டத்தில் 6 முக்கிம்கள் உள்ளன:[3]
குவாந்தான் மாவட்ட வரலாறுமுதலாம் நூற்றாண்டில் சிது, ஆங்கிலம்: Chih-Tu; or Chihtu; or Ch-ih-t'u;; சமசுகிருதம்: Raktamaritika or Raktamrittika; சீனம்: 赤土国; மலாய்: Tanah Merah) எனும் பேரரசின் ஒரு பகுதியாக குவாந்தான் நகரம் இருந்தது. 'சிது' என்றால் 'சிகப்பு மண்' (Red Earth Kingdom) என்று பொருள்.[4][5] 11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா பேரரசாலும் ஆளப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீன சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சீன வணிகர்களின் வருகையால் குவாந்தான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. குவாந்தான் நகரம் 1850-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள்தொகையியல்
பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
தட்பவெப்ப நிலைகுவாந்தான் மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை வெப்ப மண்டல மழைக்காடு ஆகும். தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை.
மேற்கோள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia