கு. க. செல்வம்கு. க. செல்வம் (Ku. Ka. Selvam, இறப்பு: 3 சனவரி 2024)[1] ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலமாக தமிழகத்தின் 15ஆவது சட்டமன்றத்திற்குச் சென்றார்.[2][3] இவர் சென்னை, கோடம்பாக்கம், வடபழனி பகுதியில் வசித்து வந்தார். சென்னை, வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் பணியிலும் இம்மன்றம் செயல்படுகிறது. 1997 இல் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார்.[4] அகஸ்டு, 2020-இல் துவக்கத்தில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர்களை புது தில்லியில் சந்தித்து பேசினார். இதனால் திமுக கட்சியின் தலைமையிடம் இவரிடம் விளக்கம் கேட்டுள்ளதுடன், இவரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கியுள்ளது.[5][6] 2021 மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார். 2022 நவம்பர் 27 ஆம் நாள் மீண்டும் திமுகவில் இணைந்து தலைமை நிலைய அலுவலக செயலாளராகப் பதவி பெற்றார்.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia