கூகுள் ஹோம்
கூகுள் ஹோம் (Google Home) என்பது கூகுள் நெஸ்ட் பிராண்டின் கீழ் கூகுள் உருவாக்கிய ஒய்-ஃபை மூலம் இணைக்கப்பட்ட நுண்ணறி ஒலிபெருக்கிகளின் வரிசையாகும். கூகுள் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான கூகிள் உதவியாளர் மூலம் சேவைகளுடன் தொடர்புகொள்வதற்கு குரல் வழியில் கட்டுப்படுத்த இச்சாதனங்கள் பயனர்களுக்கு உதவுகின்றன. இது பயனர்கள் கேட்ட விரும்பும் பாடல்களைப் பாடும், கேட்கும் கேளவிகளுக்கு பதில் அளிக்கும், கானொளியின் உள்ள பின்னணி ஒலியைக் கேட்கவும், அன்றாட செய்தியைக் கேட்கவும், பயனரின் குரல்வழி உதுதரவுக்கு ஏற்ப வீட்டில் உள்ள பின மிண்ணனு சாதனங்களை இயக்குதல், மேலும் இது பயணரின் கூகுல் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால் இது கூகுல் நாள்காட்டி, கூகுல் வரைபடம் போன்ற இதர சேவைகளையும் கண்காணித்து இருக்கும். மேலும் கூகுல் நாள்காட்டியில் நாம் இணைத்த நமது முக்கிய வேலைகளை நினைவூட்டுதல், வானிலை முன்ன்றிவுப்புகள், பயனர்கள் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் போன்ன்ற்ற்றைக் கூறியபடி இருக்கும். மேலும் தினமும் காலை பயணருக்கு அன்றாட தலைப்புச் செய்திகளை வாசித்துக் காட்டும். மேலும் இதில் அலாரம் போன்ற வசதிகளும் உள்ளன. இதில் அருகில் உள்ள உணவகம், பேரங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற எதைக்கேட்டாலும் அதற்கு முற்றிலும் குரல்வழி சேவைகளை அளிக்கிறது.[4] கூகிள் நெஸ்ட் சாதனங்கள் பயனரின் கட்டளைக்கு ஏற்ப வீட்டு தானியக்க அமைப்புகளை ஒருங்கிணைத்த ஆதரவைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராயிடு செல்பேசியில் உள்ள கூகுல் குரல் வழிச் சேவைதான் இதிலும் உள்ளது. ஆனில் இதன் திறன் கூடுதலானதாக உள்ளது. கூகுல் ஹோமுக்கு பயனர் தொடுவதை உணரும் திறண் உள்ளது. இதன் மேற்புறமுள்ள இரு துளைகளில் இரு ஒலிவாங்கிகள் உள்ளன. மேற்புறத்தை மெதுவாக தட்டினால் இது பாடுவதை நிறுத்தும். அல்லது செய்து கொண்டிருக்கும் செயலை நிறுத்தும். மேற்புறத்தில் வட்டவடிவமாக சுற்றி ஒலியின் அளவைக் கூட்டியோ குறைக்கவோ இயலும். இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இது இயங்கும். கூகிள் ஹோம் முதல் சாதனமானது, அமெரிக்காவில் 2016 நவம்பரில் வெளியிடப்பட்டது; அடுத்தடுத்த தயாரிப்பு வெளியீடுகள் 2017–2019 முதல் உலகளவில் நிகழ்ந்தன. கூகிள் நெஸ்ட் சாதனங்கள் மற்றும் கூகிள் உதவியாளர் மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம், காலப்போக்கில் கூடுதல் செயல்பாடுகள் சேர்க்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இசையின் ஒத்திசைக்கப்பட்ட பின்னணி இசைக்கு ஏற்றவாறு பல ஒலிபெருக்கிகளை அமைக்கலாம். 2017 ஏப்ரலில் வந்த ஒரு புதுப்பிப்பானது பல பயனர்களின் வரவேற்ப்பைப் பெற்றது. இந்தப் புதுப்பிப்பின் மூலமாக சாதனமானது குரலைக் கொண்டு ஆறு நபர்களை வேறுபடுத்தி அறியக்கூடியதாக மேம்பட்டது. 2017 மே மாதத்தில், கூகிள் பல புதுப்பிப்புகளை அறிவித்தது, அவற்றுள்: கனடா மற்றும் அமெரிக்காவில் எந்த செலவும் இல்லாமல் கையைப் பயன்படுத்தா தொலைபேசி அழைப்பு; திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுக்கு முன்னதாக குரல்வவழி நினைவூட்டல்கள்; மொபைல் சாதனங்கள் அல்லது குரோம்காஸ்ட்- இயக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் காட்சி பதில்கள்; புளூடூத் ஆடியோ தரம் பிரிப்பு; மற்றும் நினைவூட்டல்கள் மற்றும் நாள்காட்டியில் சந்திப்புக்கான நிகழ்சிகளை சேர்க்கும் திறன் ஆகியவை இணைக்கப்பட்டன. 2016 நவம்பரில் வெளியிடப்பட்ட அசல் கூகிள் ஹோம் ஒலிப்பெருக்கியானது உருளை வடிவில் வண்ண எல்.ஈ.டிகளுடன் கொண்டதாக இருந்தது. 2017 அக்டோபரில், கூகிள் தயாரிப்பு வரிசையில் இரண்டு வகைகளை அறிவித்தது, ஒன்று மிகச்சிறிய அளவில் வட்டமான டப்பா வடிவ கூகிள் ஹோம் மினி மற்றும் பெரிய கூகிள் ஹோம் மேக்ஸ் என்னபவாகும். 2018 அக்டோபரில், நிறுவனமானது ஏழு அங்குல தொடுதிரை கொண்ட நுண்ணறி ஒலிபெருக்கியான கூகிள் ஹோம் ஹப்பை வெளியிட்டது. 2019 மே மாதத்தில், கூகிள் ஹோம் சாதனங்கள் கூகிள் நெஸ்ட் பதாகையின் கீழ் மறுபெயரிடப்படும் என்று கூகிள் அறிவித்தது மற்றும் கூகிள் நெஸ்ட் ஹப் மேக்ஸ் என்ற பெரிய நுண்ணறி கருவியின் தோற்றத்தை வெளியிட்டது. குறிப்புகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia