கூக்ளி-சூச்சுரா

கூக்ளி-சூச்சுரா
হুগলী-চুঁচুড়া
கூக்ளி-சின்சுரா
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்ளி
பரப்பளவு
 • மொத்தம்17.29 km2 (6.68 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,77,259
 • அடர்த்தி10,000/km2 (27,000/sq mi)
மொழிகள்
 • Officialவங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
712101 712102 712103 712105 712106
Telephone code033

கூக்ளி-சூச்சுரா ( Hugli-Chuchura) நகரை கூக்ளி என்றும் சின்சுரா என்றும் அழைப்பர். இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ஹூக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது மாநிலத்தலைநகரான கொல்கத்தாவிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவில் வடக்கே அமைந்துள்ளது.

அமைவிடம்

இந்நகரம் போர்த்துகீசியர்களால் 1579 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கும் முன்னான ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர். இந்நகரின் அமைவிடம் 22°54′N 88°23′E / 22.90°N 88.39°E / 22.90; 88.39 ஆகும்.[1]

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,77,259 ஆகும்.[2] இதில் ஆண்கள் 51% பெண்கள் 49% ஆகும். இந்நகரின் கல்வியறிவு 91.10% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 93.81% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 88.39% ஆகவும் உள்ளது. மக்கட்தொகையில் 9% பேர் 6 வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள்.

விழாக்கள்

இந்நகரில்,

  • துர்கா பூஜை
  • கார்த்திக் பூஜை
  • ஜெகதாத்ரி பூஜை
  • நவபார்ஷோ பூஜை
  • பாசந்தி பூஜை
  • மனாஷா பூஜை

போன்றவை முக்கிய விழாக்களாகும்.

மேற்கோள்கள்

  1. "Yahoo maps location of Hugli-Chuchura". Yahoo maps. Retrieved 2008-12-28.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya