கூச்சிங் மாவட்டம்
![]() கூச்சிங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Kuching; ஆங்கிலம்: Kuching District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; கூச்சிங் பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கூச்சிங் மாநகரம் ஆகும். இந்த மாவட்டம் கூச்சிங் பெருநகரம் (Kuching Proper) என்றும்; படவான் (Padawan) என்றும் இரண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கூச்சிங் மாவட்டத்தின் மக்கள் தொகை 617,887. கூச்சிங் பெருநகரத் துணை மாவட்டம்கூச்சிங் பெருநகரத் துணை மாவட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
படவான் துணை மாவட்டம்1983 ஆகசுடு 11-ஆம் தேதி படவான் துணை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைமையகம் தெங் புக்காப் (Teng Bukap). கூச்சிங் வரலாறு1827-ஆம் ஆண்டில் புரூணை பேரரசின் நிர்வாகத்தின் போது, சரவாக்கின் மூன்றாவது தலைநகராக கூச்சிங் இருந்தது. 1841-ஆம் ஆண்டில், கூச்சிங்கில் ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவிய ஜேம்சு புரூக்கிற்கு கூச்சிங் பகுதியின் ஒரு சிறு பகுதி கொடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் கூச்சிங், சரவாக் இராச்சியத்தின் தலைநகரானது. போர்னியோ காடுகளில் வாழ்ந்த டயாக் மக்களில் பெரும்பாலோர் ஜேம்சு புரூக்கினால் மன்னிக்கப் பட்டார்கள். பின்னர் அவரின் விசுவாசிகளானார்கள். கூச்சிங் நகரம் வளர்ச்சி கண்டது. சார்லஸ் வைனர் புரூக்இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கூச்சிங் நகரில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இருப்பினும், 1946-ஆம் ஆண்டில் சரவாக்கின் கடைசி ஆளுநராக இருந்த ராஜா சர் சார்லஸ் வைனர் புரூக் (Sir Charles Vyner Brooke) என்பவர் ஒரு முடிவு எடுத்தார். சரவாக் மாநிலத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு காலனிப் பகுதியாக (British Crown Colony) விட்டுக்கொடுக்க முடிவு செய்தார். பிரித்தானியக் காலனித்துவக் காலத்திலும் கூச்சிங் தலைநகரமாகவே இருந்தது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia