கூத்தாய் தேசிய பூங்கா
கூத்தாய் தேசிய பூங்கா ஆங்கிலம்: Kutai National Parkt; என்பது இந்தோனேசியா, கிழக்கு கலிமந்தான், போர்னியோ தீவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தாழ்நிலத் தேசிய பூங்கா ஆகும். இது பூமத்திய ரேகைக்கு வடக்கே சுமார் 10 முதல் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. புவியியல்இந்தப் பூங்கா மகாகம் ஆற்றின் (Mahakam River) வடக்கே அமைந்துள்ளது; மற்றும் தனாவ் மாவ் ஏரி, சாந்தன் ஏரி, பெசார் ஏரி, சிராபன் ஏரி போன்ற பல ஏரிகளை உள்ளடக்கியது. இந்தப் பூங்கா, பொண்டாங் (Bontang) மற்றும் சங்கத்தா (Sangatta) நகரங்களை ஒட்டியும்; மாநிலத் தலைநகர் சமாரிண்டாவிற்கு (Samarinda) வடக்கே 120 கி.மீ. தொலைவிலும் உள்ளது. தேசிய பூங்காவிற்குள் பல பாரம்பரிய பூகிஸ் குடியிருப்புகள் உள்ளன.[1] சூழலியல்![]() கூத்தாய் தேசிய பூங்கா 2,000 கி.மீ.2 பரப்பளவில் பரவியுள்ளது. இது 1970-களில் இருந்து பாதுகாக்கப்பட்ட முன்னாள் கூத்தாய் வேட்டை விலங்குப் புகலிடப் பகுதியாகும் (Kutai Game Reserve). இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், வணிக நோக்கத்திற்காகக் காடுகள் வெட்டப் படுவதையும், சுரங்க நிறுவனங்களின் ஊடுருவல்களையும் தடுக்க இயலவில்லை. இதன் காரணமாக, காடுகள் அழிப்பதைத் தடுக்கும் முயற்சியாக கூத்தாய் தேசிய பூங்கா 1982-இல் நிறுவப்பட்டது. பெரும் போர்னியோ காட்டுத் தீமேலும், 1982/83 ஆம் ஆண்டு பெரும் போர்னியோ காட்டுத் தீயினால், கூத்தாய் காடுகளின் பெரும் பகுதிகள் அழிந்து விட்டன. மேலும் பூங்காவின் கிழக்கு எல்லையில், பொது மக்களின் தொடர் அத்துமீறல்களினால், உண்மையான வனப்பூங்கா பகுதி குறைந்து வருகிறது. வளர்ச்சி பெற்ற காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 30% மட்டுமே எஞ்சி உள்ளது. சமரிண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Samarinda International Airport) மட்டுமே கூத்தாய் தேசிய பூங்காவிற்கு ஒரே பெரிய நுழைவாயிலாக உள்ளது.[2] சுற்றுலாப் பயணிகள் பூங்காவை அணுகுவதற்கு இரண்டு முக்கிய இடங்கள் உள்ளன. சங்கத்தாவிற்கும் போண்டாங்கிற்கும் இடையிலான சாலையில் சங்கிமா பூங்கா உள்ளது. எனவே சிறு வாகனங்கள் அல்லது பேருந்துகள் மூலம் அணுகலாம். இப்பகுதியில் பல பழைய அமைப்பைக் கொண்ட தேசிய பூங்கா கட்டிடங்கள் உள்ளன. ஓராங் ஊத்தான் மனிதக் குரங்குகள்2004-இல், ஓராங் ஊத்தான்களின் எண்ணிக்கை 600 என பதிவு செய்யப்பட்டது. 2009-இல் 60 என வியத்தகு அளவில் குறைந்து விட்டது.[5] இருப்பினும், தொடர் பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டன.[3][4] அதன் பின்னர் 2010-இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 2,000 ஓராங் ஊத்தான்கள் வசிப்பதாகக் கண்டறியப்பட்டது.[5] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia