கெட்டி மையம்
கெட்டி மையம் (Getty Center), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின அருகில் அமைந்துள்ளது. கெட்டி மைய வளாகத்தில் ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் மற்றும் கெட்டி வில்லா எனும் இரண்டு அருங்காட்சியகங்கள் உள்ளது. இது ஜீன் பால் கெட்டி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இம்மையம் 16 டிசம்பர் 1997 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. [2] இம்மையம் கட்டிடக் கலை மற்றும் அழகிய தோட்டங்களால் நன்கறியப்பட்டுள்ளது. சிறு மலை மீது அமைந்த கெட்டி மையத்திற்கு செல்ல, மலையடிவாரத்தில் கார்கள் வைக்குமிடத்திலிருந்து ஒற்றைத் தண்டூர்தி சேவைகள் உள்ளது. லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் பிரண்ட்வுட் பகுதியில் அமைந்த கெட்டி மையத்திலுள்ள ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் மற்றும் கெட்டி வில்லாவை பார்வையிட ஆண்டிற்கு 1.8 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். கெட்டி மையத்தின் ஜீன் கெட்டி அருங்காட்சியகத்தில் இருபதாம் நூற்றாண்டிற்கு முந்தைய ஐரோப்பிய மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து கிடைத்த ஓவியங்கள், கல் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், அழகிய கலைப் பொருட்கள் மற்றும் 1830க்கு முந்தைய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3][4]. மேலும் கெட்டி மையத்தின் வெளிபுறங்களில் பழங்கால சிற்பஙகளாலும், சிலைகளாலும் அழகூட்டப்பட்டுள்ளது. மேலும் கெட்டி வளாகத்தில், கலைப்பொருட்களை ஆய்வு செய்யும் நிறுவனம் மற்றும் பாதுகாக்கும் நிறுவனம் (Getty Conservation Institute), கெட்டி அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் இயங்குகிறது. கெட்டி மையம், நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் வட்ட வடிவில் வடிவமைத்துக் கடடப்பட்டுள்ளது. அமைவிடம் மற்றும் வரலாறு![]() துவக்கத்தில் கெட்டி மையம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் அருகே பசிபிக் பலிசாடிஸ் பகுதியில் 1954ல் நிறுவப்பட்டது. பின்னர் கெட்டி மையத்தில் ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகப் பிரிவு நிறுவப்பட்டது. 1970ல் இத்தாலி நாட்டு கட்டிடக் கலையில் அமைந்த ஒரு வில்லா போன்ற கட்டிடத்தை கெட்டி மையத்தில் ஜீன் பால் கெட்டி கட்டினார். 1974ல் கெட்டி, தான் சேகரித்த தொல்பொட்களை கெட்டி மையத்தின் வில்லாவில் மக்களின் காட்சிக்கு வைத்தார். 1976ல் ஜீன் பால் கெட்டியின் இறப்பிற்குப் பின்னர், 1976ல் அவரது அனைத்துச் சொத்துக்கள், அவர் நிறுவிய அருங்காட்சியகங்களை பராமரிப்பதற்காக, கெட்டி அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டது. கெட்டி மையத்தின் வரிவாக்கத்திற்காக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்திற்கு அருகே உள்ள 110 ஏக்கர் பரப்பு கொண்ட சாண்டா மோனிகா மலையின் 24 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள். இதைச் சுற்றியுள்ள 600 ஏக்கர் நிலப்பரப்பை இயற்கையான பகுதியாக கலிபோர்னியா மாநில அரசு 1983ல் அறிவித்தது. கடல் மட்டத்திலிருட்ந்து 900 அடி உயரத்தில் உள்ள கெட்டி மையத்தின் கிழக்கில் பசிபிக் பெருங்கடல் உள்ளது. [5][6]கெட்டி மையத்தில் கட்டிடங்களை நிறுவ 449 மில்லியன் அமெரிக்க டாலர்களும்; நிலத்தை வாங்கவும், மேம்படுத்தவும் 115 மில்லியன் டாலர்களும்; உள் அலங்காரப் பணிகளுக்காக 30 மில்லியன் டாலர்களும்; காப்புறுதி கட்டணம், பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்களின் ஊதியம், பாதுகாப்பு வசதிகளுக்காக 139 மில்லியன் டாலர்களும் செலவழிக்கப்பட்டுள்ளது. சூன் 2013 நிலவரப்படி கெட்டி மையத்தின் சொத்துக்களின் மதிப்பு 3.853 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. (இதில் கலைப் பொருட்களின் மதிப்பு சேர்க்கப்படவில்லை) ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்![]() ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகத்தில் பண்டைய கிரேக்கம், பண்டைய ரோம் மற்றும் பண்டைய எரித்திரியாவின், மத்திய காலம் முதல் தற்காலம் வரையிலான நெய்யோவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கெட்டி வில்லா![]() கெட்டி வில்லாவின் கட்டிட அமைப்பு, ஹெர்குலியத்தில் அமைந்துள்ள பாபிரி வில்லாவின் துாண்டுதலினால் அமைக்கப்பட்டதாகும். கெட்டி வில்லா அருங்காட்சியகத்தில் பண்டைய கிரேக்கம், உரோகப் பேரரசுகளிலிருந்து கிடைத்த சிற்பங்கள், சிலைகள், கட்டிடத் தூண்கள், மட்பாண்ட பொருட்கள் போன்ற அரிய தொல்லியல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கெட்டி வில்லாவில் 44,000 கிரேக்க, ரோமானிய, மற்றும் யூட்ருசன் பழங்காலச் சின்னங்களைக் கொண்டுள்ளது. அவை கி.மு 6500 முதல் கி.பி 400 ஆம் ஆண்டு வரையிலான காலப்பழமை கொண்டவை. தொல்பொருள் சார் மற்றும் இன வரலாறு பாதுகாப்பு தொடர்பான கெட்டி தலைமையாளர் திட்ட அலுவலகம் இவ்வளாகத்தினுள் அமைந்துள்ளது. கெட்டி ஆய்வு மையம்கெட்டி மையத்தின் ஒரு பிரிவான கெட்டி ஆய்வு நிறுவனம், காட்சி கலைகளை மேம்படுத்துவதற்கும், அறிவை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.[8] மேலும் கெட்டி ஆய்வு நிறுவனம் ஆய்வு மாணவர்களுக்கான பெரிய நூலகம் கொண்டுள்ளது. இந்நூலகத்தில் ஒன்பது இலட்சம் நூல்கள், பருவ இதழ்கள், இரண்டு மில்லியன் கலை மற்றும் கட்டிடக் கலை தொடர்பான புகைப்படங்கள் கொண்டுள்ளது.[9] GRI's other activities include exhibitions, publications, and a residential scholars program.[8]கெட்டி மையத்தின் மேற்குப் பகுதியில் கெட்டி ஆய்வு நிறுவனம் செயல்படுகிறது. கெட்டி ஆய்வு நிறுவனத்தின் நுழைவாயிலில் உள்ள கலைக் கூடத்தை பொதுமக்கள் பார்வைக்கும் உள்ளது. தோட்டம்![]() ![]() கெட்டி மையத்தின் மத்தியப் பகுதியில் அமைந்த தோட்டம் 1,34,000 சதுர அடி கொண்ட பெரிய தோட்டம் ஆகும். இதனை தோட்டக் கலைஞர் இராபர்ட் இர்வின் 1992ல் திட்டமிட்டு, 1997ல் நிறுவி முடித்தார். [10] கெட்டி மையத்திலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் அகலப் பரப்புக் காட்சிஇதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia