கெமாமான் மக்களவைத் தொகுதி
கெமாமான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kemaman; ஆங்கிலம்: Kemaman Federal Constituency; சீனம்: 甘馬挽國會議席) என்பது மலேசியா, திராங்கானு, கெமாமான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P040) ஆகும்.[8] கெமாமான் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து கெமாமான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] கெமாமான் மாவட்டம்கெமாமான் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்; திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். அவற்றில் தென்சீனக் கடலை ஒட்டிய மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். கெமாமன் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கில் டுங்குன் மாவட்டம் (Dungun District); தெற்கிலும் மேற்கிலும் பகாங் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக அமைகின்றது. கெமாமான் மாவட்டத்தின் நிர்வாக மையம் மற்றும் முக்கியப் பொருளாதார மையம் சுக்காய் நகரம். திராங்கானு - பகாங் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் உள்ளது. உலு திராங்கானுஇந்த மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய நகரங்கள் கிஜால், கெர்த்தே மற்றும் கெமாசிக். இந்த மாவட்டம் ஒரு நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது. ஏறக்குறைய 1000 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது. உலு திராங்கானு மாவட்டத்திற்கு அடுத்த நிலையில், இந்த மாவட்டம் மூன்றாவது பெரிய மாவட்டமாகும். கெமாமான் மக்களவைத் தொகுதி
கெமாமான் தேர்தல் முடிவுகள்கெமாமான் இடைத்தேர்தல் 2023(சே அலியாஸ் அமீத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர்)
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia