கெய்லைட்டு
கெய்லைட்டு (Keilite) என்பது (Fe,Mg)S) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இரும்பு-மக்னீசியம் சல்பைடு கனிம வகை என்று இது வகைப்படுத்தப்படுகிறது. என்சிடாடைட் காண்டிரைட் வகை விண்வீழ்கல்லில் கெய்லைட்டு காணப்படுகிறது [1]. நினின்கெரைட்டு கனிமத்தை ஒத்த இரும்பு மிகுதி கனிமம் என்றும் இக்கனிமம் கருதப்படுகிறது [2]. 1934 ஆம் ஆண்டில் பிறந்த அவாய் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிளாசு கெயிலின் பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. என்சிடாடைட் காண்டிரைட், சாக்லோத்சை விண்கல் போன்ற விண் பொருட்களில் கெயிலைட்டு காணப்பட்டது. என்சிடாடைட் காண்டிரைட் விண்வீழ்கல்லால் தாக்கப்பட்டு உருகித் தனிந்த விண்கல் போல இது தோன்றுகிறது. விண்கல்லின் தாக்கத்தால் உருகிய கெய்லைட்டு இடம்பெறாத பாறைச் சேர்மம் என்ற விளக்கமும் இதற்கு கூறப்படுகிறது. விண்கற்களின் தாக்கத்திற்குப் பிறகு பாறைகள் மெல்லக் குளிர்ந்து பின் வினைகள் மெல்ல நிகழ்ந்த ஓர் ஆழமான அடக்கம் என்றும் விளக்கப்படுகிறது [3]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் கெய்லைட்டு கனிமத்தை Ke[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia