கெருடாவில்
9°49′6.01″N 80°8′39.09″E / 9.8183361°N 80.1441917°E கெருடாவில், யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். இது வல்வெட்டித்துறையின் அயலில் உள்ளது. தென்மராட்சியிலும் சாவகச்சேரிக்கு அண்மையில் கெருடாவில் என அழைக்கப்படும் ஓரிடம் உள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள கெருடாவில் தொண்டமனாற்றுப்பகுதியில் உள்ள கெருடாவில் ஆகும். பாடசாலை
பொதுநிறுவனங்கள்
வரலாற்று முக்கியத்துவ எச்சங்கள்
ஆலயங்கள்
கலைஞர்கள்துரைராஜா (மறைவு) இவர் ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சங்கீத வித்துவானாக அறியப்பட்டவர். பல இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இ. ஆழ்வாப்பிள்ளை இளையவன் ஆழ்வாப்பிள்ளை. கெருடாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். நாடகக் கலைஞராக அறியப்பட்டவர். நடிப்பு, பேச்சு, சமூகச்செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர். சோமசுந்தரம் இவரும் ஒரு நாடகக்கலைஞர். கெருடாவில் விவேகானந்தா சனசமூக நிலையம், கெருடாவில் அண்ணா சனசமூகம் என்பன இவரது கலையாற்றலை வளர்க்க களமாக இருந்துள்ளன. சமூக நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர். ஆரம்பத்தில் இவர் நாடக நடிகராகவே அறியப்பட்டவர். வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia