கேசவ பிரசாத் மௌரியா
கேசவ பிரசாத் மௌரியா (Keshav Prasad Maurya) (பிறப்பு: 7 மே 1969), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் துணை முதலமைச்சராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், வணிகரும் ஆவர். அரசியல்இளமையில் இவர் ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தில் தொடர்புடையவராக இருந்தார். மேலும் ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கு கொண்டார். பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அணி மற்றும் விவசாயிகள் அணியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். 2012ல் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2014ல் புல்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஏப்ரல் 2016ல் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சிராத்து சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற கேசவ பிரசாத் மௌரியா 18 மார்ச் 2017 அன்று துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[2] 9 செப்டம்பர் 2017 முதல் இவர் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia