கேசாங்
கேசாங் (Kaesong; Gaeseong; கொரிய உச்சரிப்பு: [kɛsʰʌŋ]) என்பது வடகொரியாவின் தென் பகுதியில் உள்ள வட குவாங்கே மாகாணத்தின் ஒரு நகரமாகும். முன்பு இது, முன்னாள் நேரடியாக ஆட்சி நடத்தும் நகரமாகவும், கேசாங் தேபோங் மற்றும் அடுத்த கொர்யியா இராச்சிய ஆட்சிக்காலத்தில் கொரியாவின் தலைநகரமாகவும் இருந்தது. இது கேசாங் தொழில்துறை பிராந்தியத்திற்கு அருகிலும் மற்றும் தென் கொரியாவின் எல்லையோடும் ஒட்டியுள்ளது. கேசாங் மன்வோல்டே மாளிகையின் மீதமுள்ள பகுதியையும் கொண்டுள்ளது. இது 1910-45வரையிலான சப்பானிய ஆட்சிக்காலத்தில் சப்பானிய மொழி உச்சரிப்பான கெய்சோ ("Kaijō") என்ற பெயராலும் அழைக்கப்பட்டது. 2009இன் மக்கள்தொகை அடிப்படையில் இங்கு 192,578 குடிகள் வசிக்கின்றனர்.[1] புவியியல்கே சாங் கொரியாவின் மையத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் வட கொரியாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. கேபுங், சங்க்புங்க், பன்முன் மற்றும் கும்சோன் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. கெசாங் நகரத்திற்கு இங்கியோன் நகராட்சியின் காங்வா தீவு ஒரு குறுகிய சேனல் அப்பால் தெற்கில் அமைந்துள்ளது. இந்நகரம் 1,309 கி.மீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. கேசாங்கின் நகர்ப்புற மாவட்டம் சொங்காக் (Songak; Songak-san; 송악산; 松嶽山) (489 m) மற்றும் போங்க்மியோங் ஆகிய மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளது. கேசாங்கின் நகர மையம் நகரத்தின் சின்னமான கிம் இல் சுங் (Kim Il Sung) சிலையைக் தாங்கிக் கொண்டுள்ள ஜனம் ஏற்றத்தாலும் (103 m) சூழப்பட்டுள்ளது. கேசாங்கின் வடகோடி எல்லையாக அமைந்திருப்பது அகோபிர்யாங் மலைத்தொடரின் முடிவு ஆகும். இம்மலைத் தொடர் சொன்மா (Chŏnma, 757 m), சொங்கோ (Sŏnggŏ), மியோஜி (Myoji, 764 m), சுர்யாங் (Suryong, 716 m), சேசொக் (Chesŏk, 749 m), குவாஜாங் (Hwajang, 558 m), மற்றும் ஓக்வான் (Ogwan) ஆகிய சிகரங்களைக் கொண்டுள்ளது. மலைப்பாங்கான வடகிழக்கு பகுதி நீங்கலாக கேசாங்கின் அதிகமான பகுதிகள் 100 மீற்றரை விடக் குறைந்த தாழ் பிரதேசங்களையே கொண்டுள்ளன.[2] நிர்வாகப் பிரிவுகள்2002இற்கு முதல் நேரடியாக ஆட்சி நடத்தும் நகரமான கேசாங், கேசாங் நகரம் மற்றும் சாங்க்புங்க் மாவட்டம், சாங்க்புங்க் மாவட்டம் மற்றும் பன்முன்சோம் ஆகிய மூன்று மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. 2003இல் பியானும்-கன் மற்றும் கேசாங்-சீயின் பகுதியும் நேரடியாக ஆட்சி நடத்தும் நகரமான கேசாங்கிலிருந்து பிரிக்கப்பட்டு கேசாங் தொழில்துறை பிராந்தியத்துடன் இணைக்கப்பட்டது. 2002இல் கேசாங்கின் மிகுதிப் பகுதி வட குவாங்கே மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. கேசாங் தற்போது டாங் என அழைக்கப்படும் 24 நிர்வாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[3]
போக்குவரத்து![]() கேசாங் பியொங்யாங் மற்றும் வேறு பல நகரங்களுடன் இரயில் மற்றும் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் முக்கிய ரயில்வே நிலையம் பியோங்க்பு கோட்டிலுள்ள (Pyongbu Line) கேசாங் ரயில் நிலையமாகும். சகோதர நகரங்கள்
கேசாங்கில் பிறந்த பிரபல நபர்கள்
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
வெளியிணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் கேசாங் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia