KTM Class 23 KTM Class 24 EMD GT18LC-2 KTM Class 26 YDM4 KTM Class 61
தொழிநுட்பத் தரவுகள்
தடங்களின் எண்ணிக்கை
2
தட அளவி
1,000 mm (3ft 3.38in)
மின்வசதி
25 kV 50 Hz AC
சராசரி வேகம்
110 km/h (68 mph)
அதியுயர் வேகம்
140 mph (230 km/h)
மலாயா நகரிடை தொடருந்து (மலாய்: KTM Antarabandar; ஆங்கிலம்: KTM Intercity); என்பது மலேசியத் தீபகற்பத்தில் நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகளை வழங்கும் போக்குவரத்து அமைப்பு ஆகும். மலாயா தொடருந்து நிறுவனம் (மலாய்: Keretapi Tanah Melayu Berhadஆங்கிலம்: Malayan Railways Limited) (KTMB) எனும் அரசு சாரா நிறுவனத்தினால் நடத்தப்படுகிறது.[1]
மலாயா நகரிடை தொடருந்து நீண்ட காலமாக மிதமான வெற்றியை அனுபவித்து வருகிறது. ஆனாலும் சாலை மற்றும் விமானப் பயணங்களுடன் அதிக அளவில் போட்டியை எதிர்கொள்கிறது.
ஏனெனில் மலேசிய விரைவுச்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் எண்ணிக்கையில் அதிக அளவில் அதிகரித்து விட்டன. மலேசியர்கள் பெரும்பாலோர் விரைவுச்சாலைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.[2]
மேலும் மலிவு விலையில் விமான நிறுவனங்கள் குறுகிய பயண நேரத்தை வழங்குகின்றன. குறைந்த விலை - குறைந்த நேரம் எனும் அடைமொழியுடன் உள்ளூர் விமானச் சேவைகள் துரிதமான சேவைகளை வழங்கி வருகின்றன. இதனால் மலாயா நகரிடை தொடருந்தின் அமைப்பு, அண்மைய காலங்களில் உள்ளூர் விமான நிறுவனங்களுடன் பலத்த போட்டிகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.