கேப்ரியெல்லா சர்மியான்டோ வில்சன்கேப்ரியெல்லா சர்மியான்டோ வில்சன் (Gabriella Sarmiento Wilson) (பிறப்பு ஜூன் 27, 1997), தொழில் ரீதியாக 'HER' என நன்கு அறியப்பட்டவர், ஓர் அமெரிக்கப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். அவரின் முதல் இசைத்தட்டுத் தொகுப்பு 'ஹெர்' (HER - 2017). இவரின் முதல் இரண்டு இசைத்தட்டுகள் ஆறு பாடல்களின் தடங்களைக் கொண்டவை. ஐந்து கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவரின் இரண்டாவது இசைத்தட்டு தொகுப்பு ஐ யூஸ் டு நோ ஹர், ஐந்து கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. "ஐ கான்ட் ப்ரீத் " எனும் பாடலுக்காக 2021-ஆம் ஆண்டில், சிறந்த பாடலுக்கான கிராமி விருது வழங்கப்பட்டது. ஜூடாஸ் அண்ட் த பிளாக் மேசியா (2021) எனும் திரைப்படத்திலிருந்து "உங்களுக்காக போராடு" எனும் பாடலுக்கும் அகாடமி விருது அவருக்கு வழங்கப்பட்டது.]] ஆரம்ப கால வாழ்க்கைகேப்ரியெல்லா சர்மியான்டோ வில்சன், கலிபோர்னியாவின் வலெஜோவில் ஒரு பிலிப்பினோ தாய்க்கும் மற்றும் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கத் தந்தைக்கும் பிறந்தார். கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் வளர்க்கப்பட்ட அவர், காபி வில்சனாக நடித்து, ஓர் இளம் குழந்தையாக ஒரு கலைஞராக பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் தன் ஒன்பது வயதில் நிக்கலோடியோன் தொலைக்காட்சி திரைப்படமான ஸ்கூல் கிர்ல்ஸில் நடித்தார் .
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia